Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஓடிடியிலும் ஒரே நாளில் மோதும் வாரிசு, துணிவு.. ரிலீஸ் தேதி இதோ

ஓடிடியிலும் ஒரே நாளில் மோதும் வாரிசு, துணிவு.. ரிலீஸ் தேதி இதோ

- Advertisement -

இயக்குனர்  வம்சி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின.  தெலுங்கு , தமிழ்,ஹிந்தி என  வெளியான 3 மொழிகளிலும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வெற்றி அடைந்து வருகிறது. இதுவரை வாரிசு திரைப்படம் 300 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பங்கள் இந்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து வந்தாலும் பலர் இந்த திரைப்படத்தை ஓட்டி டி யில் பார்க்க விரும்புவார்கள். ஒரு சாதாரண படம் திரையரங்குகளில் வெளியானாலும் அது எப்பொழுது ஓடிடியில் வெளியிடப்படும் என்று பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தளபதியின் இந்த திரைப்படம் ஓடிடி வெளியாகும் அந்த நாளிற்காக பல தளபதி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அப்படி காத்திருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு தற்பொழுது ஒரு நற்செய்தியை வெளி வந்துள்ளது.  வாரிசு திரைப்படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டதால், வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் பிரைமில் வாரிசு திரைப்படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த தேதியில் படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

மேலும் வாரிசு திரைப்படத்தின் பல்வேறு காட்சிகள் படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்டது. இதனால் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் நீக்கப்பட்ட காட்சிகள் தனியாக யூடியூபில் தான் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று திரையரங்குகளில் ஒரே நாள் ஒரே நேரத்தில் வெளிவந்த துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் ஒன்றோடு ஒன்று ஒன்று நேருக்கு நேராக மோதி இரண்டு திரைப்படமும் வெற்றி அடைந்தது. அதே போல் தற்பொழுது ஓடிடியிலும் துணிவு திரைப்படமும் பிப்ரவரி 10ஆம் தேதி netflix வெளியிடப்பட  உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திரையரங்கில் மோதி சாதனை படைத்ததை போல் ஓடிட்டியிலும் யார் ரெக்கார்ட் படைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Most Popular