Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு, துணிவு படக்குழு முடிவால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

வாரிசு, துணிவு படக்குழு முடிவால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தளபதி விஜயின் வாரிசும் ,அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன் ரசிகர்களை விட திரையரங்கு உரிமையாளர்கள் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டின் தொடக்கத்திலேயே பொங்கல் விடுமுறை வைத்து வசூலை அள்ளி விடலாம் என அவர்கள் கருதினர். ஆனால் தற்போது இரண்டு படமும் எடுத்துள்ள முடிவு பி, சி சென்டரில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சியின் ஆழ்த்திருக்கிறது.

காரணம் இரண்டு படமும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என கருதினர். ஆனால் துணிவு திரைப்படம் ஒரு நாள் முன்பே புதன்கிழமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வாரிசு படமும் அன்றே திரைக்கு வரும் என தில் ராஜு அறிவித்துள்ளார். இதனால் வாரத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை இரண்டு படங்களும் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் முதல் நாள் வசூலை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

- Advertisement -

விடுமுறையாக இருந்தாலும் வேலை நாட்களாக இருந்தாலும் இரு நடிகர்களின் ரசிகர்களும் அன்று தியேட்டர்களில் தான் இருப்பார்கள் என்பது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வியாழன் வெள்ளி என இரண்டு நாட்களில் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் இந்த சிக்கல் இருக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் தமிழகத்தில் உள்ள பிற சென்டர்களில் நிச்சயம் இரண்டாவது நாள் வசூல் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

அதுவும் படத்தின் விமர்சனம் சரியில்லை என்றால் முதல் நாள் மட்டும் தான் எங்களுக்கு வசூல் கிடைக்கும் என்றும் அடுத்த மூன்று நாள் முழுமையாக சரிந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  குறிப்பாக பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வரும் மக்கள் சென்னையில் படத்தை முதலில் இரண்டு நாட்களில் பார்த்து விடுவார்கள் என்பதால் ஊரில் வந்து பார்க்க வாய்ப்பு இருக்காது என்றும் இதனால் எங்களுடைய கூடுதல் வசூல் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போன்று வெளிநாட்டில் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை ரிலீஸ் செய்தால் மட்டுமே ரசிகர்கள் பார்க்க ஏதுவாக இருக்கும் என்றும் புதன்கிழமை வெளியிட்டால் ரசிகர்கள் யாரும் திரையரங்குகளுக்கு வர மாட்டார்கள் என்றும் வெளிநாட்டு திரையரங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர் . மேலும் படத்திற்கான முன்பதிவு 12ஆம் தேதி என குறிப்பிட்டு ஏற்கனவே தொடங்கி விட்டதால் தற்போது டிக்கெட்டை ரத்து செய்து மீண்டும் முன் பதிவு தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் .

Most Popular