Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசுக்கு யூ சான்றிதழ்.. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி.. என்ன சாதகம்?

வாரிசுக்கு யூ சான்றிதழ்.. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி.. என்ன சாதகம்?

- Advertisement -

வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்திற்கான  அப்டேட்ஸ்கள் எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் கடந்த 4 நாட்களாக காத்து கொண்டிருந்தனர்.
பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் வாரிசு திரைப்படம் வெளியிடுவதற்கான வேலைகளை பட குழுவினர்கள் விரைவில் முடித்துக் கொண்டு வருகிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் இந்த வாரிசு திரைப்படமானது தெலுங்கு சினிமாவில் பெரிய அளவில் ரிலிஸ் செய்யப்பட உள்ளது.  இதேபோல் தல அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லரும்  வெளியாகி இருக்கிறது. ஆனால் குறிப்பிட்டு இந்த தேதியில்தான் துணிவு திரைப்படம் வெளியிடப்படும் என்ற எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வரவில்லை. வருகின்ற ஜனவரி மாதம் 11 ,12 என்ற இரண்டு தேதிகளில் படம் ரிலீஸ் ஆகலாம் என கூறி வருகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது கேரளா போன்ற மாநிலங்களில் கூட துணிவு திரைப்படத்திற்கான முன் பதிவை பதினோராம் தேதியே செய்யுமாறு விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள். தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் வெளியாக கூடிய நாள் அறிவித்த பிறகு தான் துணிவு திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்திற்கு ஏற்கனவே U/A சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இதனால் இந்த திரைப்படத்தில் அதிகமான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தற்பொழுது செய்யப்பட்ட சென்சாரின் பேரில் U சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் வாரிசு திரைப்படத்தை அனைத்து வயது உடையவர்களும் வயது வரம்பு இன்றி குடும்பத்தோடு இணைந்து பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படமாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் இரண்டு மணி 45 நிமிடம் வரை  வரை ஓடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதனால் வருகின்ற பொங்கலுக்கு குடும்பங்களுக்காக சென்று கொண்டாட கூடிய திரைப்படமாக வாரிசு திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இதே போன்று இளைஞர்களின் சாய்சாக துணிவு இருக்கும்.

Most Popular