Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? மாஸ்டர் தீலிப் சுப்ராயனின் மாஸ் பதில்

வாரிசு கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? மாஸ்டர் தீலிப் சுப்ராயனின் மாஸ் பதில்

- Advertisement -

தமிழ் சினிமாவின் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இரு படங்களுக்கும் தங்களுடைய படங்களை விளம்பரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து மாஸ்டர் திலீப் சுப்ராயண் அளித்துள்ள பேட்டி விஜய் ரசிகர்களை உற்சாக படுத்தியது.

இது குறித்து பேசிய அவர், வாரிசு திரைப்படத்தில் நான் மூன்று சண்டை காட்சிகளை இயக்கி கொடுத்திருக்கிறேன். வாரிசு திரைப்படத்தில் சண்டை காட்சிகள் உண்மையாக இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாரிசு படத்தில் கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் முந்தைய பகுதியில் தான் சண்டை காட்சிகளை இயக்கியிருக்கிறேன்.

- Advertisement -

வாரிசு படத்தில் கிளைமாக்ஸ் செம மாஸ் ஆக அமைந்துள்ளது. சண்டையைத் தாண்டி நல்ல உணர்ச்சி வச ப்படக்கூடிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வாரிசு கிளைமாக்ஸ் சீன் போது ரசிகர்களே விட்றாதீங்க அடிங்க தளபதி என்று கூறும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். படம் நினைத்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது.

- Advertisement -

காதல் ,குடும்பம், ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்திலும் விஜய் பின்னி எடுத்து இருக்கிறார். வாரிசு படத்தின் இன்டர்வல் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் படங்களை டெம்ப்ளேட்டிற்கு ஏற்ற வகையில் வாரிசு திரைப்படமும் அமைந்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக மாறும் என்று சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் குறிப்பிட்டுள்ளார். திலிப் சுப்பராயனின் இந்த வீடியோ விஜய் ரசிகர்களுடைய மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் புக்கிங் தொடங்கியுள்ளது.

Most Popular