Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு இன்றுடன் தியேட்டரில் கடைசி.. காரணம் என்ன?

வாரிசு இன்றுடன் தியேட்டரில் கடைசி.. காரணம் என்ன?

- Advertisement -

கடந்த பொங்கலுக்கு வம்சி  இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது நடிகர் விஜய் படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை வாரிசு திரைப்படம் பெற்றுள்ளது.
தளபதி விஜய் மீண்டும் ஒரு கலகலப்பான தோற்றத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது .

தமிழகத்தில் பி, சி சென்டர்களில் ஒரு வெற்றிகரமான படம் என்பது நாலு வாரங்கள் ஓடினாலே அது மிகப்பெரிய சாதனையாக தற்போது கருதப்படுகிறது .ஆனால் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 10ஆம் தேதி ஆகிய வெளியான புதிய ரிலீசுகளையும் தாண்டி 30 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.இதனால் வாரிசு திரைப்படத்தை இன்றோடு திரையரங்குகளில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் வாத்தி மற்றும் வாரிசு திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவால் வெளியிடப்பட்டது.  இதனால் வாரிசு திரைப்படத்தை நீக்கிய பின்பு வாத்தி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதனால் வாரிசு திரைப்படம் சிங்கிள் ஸ்கிரீனில் தான் பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து வாத்தி திரைப்படத்தின் உடைய சிறப்பு காட்சி இன்று வெளியிடப்பட இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள். திருச்சி பேலக், நாகப்பட்டினம் தேவி, திருவாரூர் தைலம்மை சினிமாஸ் ,கும்பகோணம் வாசு ,மணப்பாறை இந்திரா ,மூலக்கடை சண்முகா போன்ற சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் இன்றுடன் முடிவடைகிறது.

இருப்பினும் மல்டிபிளக்ஸ் இல் தொடர்ந்து வாரிசு திரைப்படம் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டு காட்சிகளை வைத்து படத்தை ஓட்ட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். வார இறுதி நாட்களில் வாரிசு திரைப்படத்திற்கு இன்னும் கூட்டம் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ரோகினி ராக்கி ஆகிய திரையரங்குகளில் வாரிசு திரைப்படத்திற்கு 50-வது நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் மட்டும் வாரிசு திரைப்படம் 144 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular