சினிமா

கத்தி காயின் சண்டை போல் வாரிசில் ஹார்பர் சண்டை.. வெளியான அசத்தல் தகவல்

தளபதி விஜய் படத்தில் சண்டை காட்சிகள் எப்போதுமே பேசும் அளவில் இருக்கும். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குடும்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்று கூறப்பட்டதால், இதில் சண்டை காட்சிகள் இருக்காது என ரசிகர்கள் கருதினர். ரசிகர்களுக்கு இனிப்பு செய்தி வழங்கும் விதமாக தான் ட்ரெய்லரில் படத்தில் இருக்கும் சண்டை காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ஆன செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் நாணயங்களை வைத்து சண்டை போடும் காட்சி இன்றளவும் மனதில் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறது. தற்போது வாரிசு திரைப்படத்திலும் ஹார்பரில் நடைபெறும் சண்டை காட்சிகள் அதே அளவிற்கு பேசப்படும் என பட குழு தெரிவித்து இருக்கிறது. கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் தம்மை தாக்க வருபவர்களை அடித்து நொறுக்கும் அளவுக்கு இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இது வெறும் சண்டைக் காட்சி ஆக இல்லாமல் எமோஷனலும் கலந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஹார்பர் சண்டை காட்சிகள் இன்டெர்வலுக்கு முன்பு அல்லது இன்டர்வலுக்கு பின்பு வரலாம் என்று திரைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இது குடும்ப படம் தான் என்று பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் காத்திருக்கும் வகையில் பல கமர்சியல் மசாலாக்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

Advertisement

குறிப்பாக முதல் பாதி மொத்தமாக எமோஷனலாக இருக்கும் என்றும் இரண்டாம் பாதி விஜய் ரசிகர்களுக்காக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை விட துணிவுக்கு கூடுதல் திரையரங்குகள் கடைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜு முதல் நாள் வசூலில் முன்ன பின்ன ஆகலாம் .ஆனால் படம் ஓடி முடிவடைந்த போது வாரிசு அதிக வசூலை பெற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top