Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாடிரெண்டிங்கில் நம்பர் 1 விஜய்.. வாரிசு வசூலை வெளியிட்ட தில் ராஜூ

டிரெண்டிங்கில் நம்பர் 1 விஜய்.. வாரிசு வசூலை வெளியிட்ட தில் ராஜூ

- Advertisement -

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் யார் என்ற கேள்விக்கு பொங்கல் பந்தயத்தில் பதில் தெரிந்து விடும் என ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்தது. காரணம் ஜனவரி 11ஆம் தேதி அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் துணிவு திரைப்படமும், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் முந்தினாலும் அதன் பிறகு வாரிசு அதிக வசூலை பெற்றது.

இந்த நிலையில் முதல் 5 நாட்களில் 150 கோடி ரூபாயும் 7 நாட்களில் 200 கோடி ரூபாயும் வாரிசு திரைப்படம் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இதனை அஜித் ரசிகர்கள் நம்பாத நிலையில் தயாரிப்பு குழு சொல்லும் தகவலும் பிரபல திரைப்பட வணிகர்கள் கணித்த தொகையும் ஒரே அளவில் தான் இருப்பதாக பின்னர் தெரிய வந்தது. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தயாரிப்பு குழு சொல்லும் வசூலை நம்பி தான் ஆக வேண்டும் என்றும் ஒருவேளை அவர்கள் கூடுதலாக சொல்லி இருந்தால் நானே முதல் நாளாக எதிர்த்து இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வசூல் கிடைத்தது. சென்னை,திருச்சி, மதுரை ,கோவை உள்ளிட்ட பெரும்பான்மையான நகரங்களில் படம் பெரிய வசூல் சாதனையை செய்தது. இந்த நிலையில் வாரிசு பட குழு தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படம் வெளியாகி 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விஜய் படங்களில் குறைந்த நாட்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்று பெருமையை வாரிசு பெற்றுள்ளது. அதுவும் அஜித்துடன் மோதி இந்த சாதனையை வாரிசு நிகழ்த்திருக்கிறது.

- Advertisement -

விஜய் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்றால் அது பிகில் தான். சுமார் 308 கோடி ரூபாய் அந்த படம் வசூல் ஈட்டியது. இதனால் வாரிசு அந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு திரைப்படத்தை பொருத்தவரை தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி லாபத்தை பெற்றிருக்கிறது. எனினும் வாரிசு இதுவரை 93 சதவீதம் போட்ட பணத்தை தமிழகத்தில் எடுத்துள்ளது. இதனால் இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதனை விஜய் ரசிகர்கள் நம்பர் ஒன் விஜய் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Most Popular