வாரிசு துணிவு படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. தேவையான அனைத்து அப்டேட்களும் இரு தரப்பினரிடம் இருந்தும் வந்துவிட்டது. ரீலீஸ் தேதி மட்டுமே இன்னும் பாக்கி. வாரிசு படக்குழுவினர் பல மாதங்கள் முன்பே பொங்கல் வெளியீடு என அறிவித்துவிட்டார். டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த துணிவு படம், வேலை முடியாத காரணத்தால் பொங்கலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 8 வருடங்கள் பின் விஜய் – அஜித் மோதல் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் எந்த படத்திற்கு எவ்வளவு ஸ்கிரீன்கள் பகிர்ந்துக் கொடுப்பது என்பது தான். துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வழங்குவதால், எளிதாக அதிக தியேட்டர்களை பிடித்துவிட்டார். அது மட்டுமில்லாமல் வாரிசு படத்தையும் நார்த் சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர் என முக்கிய இடங்களிலும் வழங்குகின்றனர். மற்ற அனைத்தும் 7 ஸ்கிரீன் ஸ்டுடிோ மூலம் டிஸ்ட்ரிபியூட் செய்யப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் அஜித்தின் துணிவு படத்திற்கே அதிக ஒதுக்கீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 2/3 தினங்கள் கழித்து எந்த படம் சிறப்பாக அமைகிறதோ அதற்கேற்றவாறு மாற்றி அமைக்கப்படும். ஆனால் முதல் நாள் கலெக்ஷன் மிகவும் முக்கியமாக கருதப்படும், குறிப்பாக அஜித் படத்திற்கு. கிங் ஆப் ஓப்பனிங் என அழைக்கப்படும் அவர் ஒவ்வொரு படத்திற்கு முதல் நாள் கலெக்ஷனில் சாதனை படைத்து வருகிறார்.
ஏற்கனவே வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு, தன் படத்திற்கு அதிக ஸ்கிரீன்கள் வேண்டுமென்று ரெட் ஜெயன்ட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது எந்த விதத்திலும் பிரியோஜனம் இல்லை. அதோடு விடாமல், விஜய் தான் நம்பர் 1 என எடக்கு மடக்காக பேசி அஜித் ரசிகர்கள், சினிமா துறையில் இருப்பவர் என பலரிடம் இருந்து வாங்கிக் கட்டிகொண்டார்.
எந்தப் படம் முன்கூட்டி வரப் போகிறது ?
முதல் நாள் கலெக்ஷன் மற்றும் தியேட்டர்களில் மோதலைத் தடுப்பதற்காக ஏதோ ஒரு படம் ஒரு நாள் முன்கூட்டி வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வாரிசு படக்குழுவினர் ஜனவரி 12 என ஏற்கனவே அறிவித்துவிட்டனர். துணிவு படக்குழுவினர் இன்னும் எதும் கூறவில்லை, மேலும் அவர்கள் தான் ஜனவரி 11ஆம் தேதி வெளியிடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் முதல் நாள் ஓப்பனிங்கில் எப்படியும் அஜித் தான் அடிப்பார். அதனால் போனி கபூர் பயப்பட தேவையில்லை. ஆனால் இருபடமும் தனித் தனியாக வந்தால் இருவருக்கும் கூடுதலாக பெரிய லாபம் கிடைக்கும். அதனால் இதை மனதில் வைத்துக்கொண்டு தில் ராஜு படத்தை ஒரு நாள் முன்னர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றார். நாளை மாலை டிரைலரில் ரீலீஸ் தேதி குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கே.ஜி.எப் படத்துடன் மோதும் போது ஒப்பனிங்க்காக பீஸ்ட் படத்தை இதே போல் தான் முன்னாடி தள்ளிவிட்டனர்.