Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா வம்சி

வாரிசு படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் என்ன? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா வம்சி

- Advertisement -

வாரிசு திரைப்படத்தில் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. இன்னும் இந்த ட்ரெய்லர் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பொதுவாக ஒரு படம் தான் போர் அடிக்கும், ஆனால் வாரிசு டிரைலரே போர் அடிப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். எனினும் விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மிகவும் அதிகம். அவர்களை கவரும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்திருப்பதாகவும் கருத்து வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்ன என்று தற்போது பார்க்கலாம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சன் படமா குடும்பம் படமா என இரண்டு சாய்ஸ்கள் இருக்கும்போது ஃபேமிலி ஆடியன்ஸ் வாரிசை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வசூலை பொறுத்தவரையில் வாரிசுக்கு சிக்கல் இருக்காது.

- Advertisement -

இதேபோன்று விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பதும் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் நெகட்டிவ் ஆக முக்கியமாக கருதப்படுவது. வம்சி தெலுங்கு இயக்குனர் என்பதால் படம் முழுவதும் தெலுங்கு மசாலாவின் வாசனை வீசுவதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும் இது போன்ற படங்கள் நிறைய வந்துவிட்டது என்றும் இந்தப் படத்தின் கதையை முன்பாகவே யூகிக்கும் வகையில் இருப்பதாகவும் ரசிகர்கள் ட்ரைலரை பார்த்து முடிவு செய்துவிட்டனர் .

- Advertisement -

இதில் படத்தின் சென்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடம் எடுபட்டால் மட்டுமே வாரிசு வெற்றி படமாக அமையும். இது கொஞ்சம் சறுக்கினாலும் துணிவுக்கு சாதகமான சூழல் ஏற்படும். இதுபோன்று டிரைலர் ரசிகர்களுடைய பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்திருக்கும். ஆனால் படத்தை வம்சி சரியாக செய்திருந்தால் எதிர்பார்த்ததை விட படம் நன்றாக வந்திருக்கிறது என்ற பேச்சும் ரசிகர் மத்தியில் எழும். மேலும் இது வாரிசுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. வாரிசு படத்தின் நீளமும் இரண்டு மணி நேரம் 50 நிமிடம் என்ற அளவில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தலாம். இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் நம்பி மட்டுமே வாரிசு களத்தில் குதிக்கிறது.

Most Popular