சினிமா

வாரிசு படத்துக்கு பின்னடைவு..!! பிரபல நடிகரால் வந்த சிக்கல்

Vijay Vaarisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் ,நெல்சன் இயக்கத்தில் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை பெற்றது. இதனை அடுத்து நடிகர் தளபதி விஜய் தனது 66 ஆவது படமான வாரிசு படத்தை வெற்றிக்கரமாக மாற்ற சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்த வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக அமையும் என்று ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் தோழா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வாம்சி தான் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தையும் இயக்குகிறார்.வாரிசு திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் பிரபு, குஷ்பூ, சரத்குமார், ராஷ்மிகா மந்தானா, ஷாம், சங்கீதா கிருஷ் போன்ற பிரபலம் நடிகர் பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒஸ்தி, மம்பட்டியான், ஈஸ்வரன், எனிமி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் தெலுங்கிலும் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கும் இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.இவரின் இசையால் வாரிசு திரைப்படத்தின் பாடல்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வருகின்ற பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் ஆந்திரா தெலுங்கானாவில் சங்கராந்தி கொண்டாடப்படுவதால் அன்று தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ஆடி புரூஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.இதற்கு அதிக திரையரங்குக்கள் தேவைப்படுவதால் பொங்கல் அன்று தமிழில் மட்டும் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தெலுங்கு வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் தெலுங்கு மார்க்கெட்டில் இடம் பிடிக்க நினைக்கும் தளபதி விஜய்க்கு இது பின்னடைவாக இருக்கும்.

இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே ஏமாற்றம் அடைந்தாலும் முதல் நாள் வசூல் பெரும் சாதனை படைத்தது. உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூலை பீஸ்ட் திரைப்படம் பெற்றது. அதேபோன்று தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா என்பது ரசிகர்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top