சினிமா

ஆந்திராவில் தடம் பதிக்கும் விஜய்.. மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு!

Varisu Audio Launch

தளபதி ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது வாரிசு திரைப்படம். மேலும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்துடன் வாரிசு மோதுவதால் எந்த படம் வெற்றி பெறும் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த நிலையில்
கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்ட அரங்கத்தில் வெளியானது.

Advertisement

இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி விஜய் பேசிய பேச்சிருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு இருந்தது.மேலும் தளபதி விஜய்யின் இந்த வாரிசு திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல்  தெலுங்கிலும் வெளியிட இருக்கிறது. தளபதி விஜய் தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தும் நோக்கில் விஜய் இந்த திட்டத்தை அமைத்திருக்கிறார்.
தமிழில் வாரிசு திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலா கரமாக நடந்தது இதே போல் தெலுங்கிலும் நடக்குமா? அதற்கு விஜய் வருகை தருவாரா என்ற கேள்வியும் பலர் மத்தியில் பரவி வந்தது.

இதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது . ஜனவரி முதல் வாரத்தில் ஹைதராபாத்தில்ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. வாரிசு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க நினைக்கும் தளபதி விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அப்படி நிகழ்ச்சிக்கு வந்தாலும் இங்கு நடந்த இசை வெளியீட்டு விழாவின்போது பேசியது போல் அங்கும் பேசுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் இது சம்பந்தமான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நண்பன், துப்பாக்கி போன்ற திரைப்படத்திற்காக தெலுங்கில் விஜய் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 2ஆம் தேதி வர இருப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top