சினிமா

இது வேற லெவல்.. புரோமோஷனில் துணிவை அடித்து தூக்கிய வாரிசு

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் வாரிசு , துணிவு திரைப்படம் வரும் பொங்கல் முன்னிட்டு திரைக்கு வருகிறது. இன்னும் படத்தின் வெளியீட்டுக்கு ஒரு மாதமே இருப்பதால் இரண்டு படக்குழுவினரும் போட்டி போட்டு விளம்பரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் துணிவு பட குழு தீவிரமாக இறங்கியது.

பல்வேறு முன்னணி திரையரங்குகளை, துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெய்ன்ஸ் நிறுவனம் தங்கள் வசம் ஆக்கிரமித்து விட்டது. இதனால் வாரிசு போதிய திரை அரங்குகள் கிடைக்குமா என கேள்வி எழுந்த நிலையில் சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பல்வேறு பகுதிகளில் முன்னணி தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து பதிலடி தந்தது. இதனை தொடர்ந்து வாரிசு பட குழு படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தீவிரமாக இறங்கி வருகிறது.

திரையரங்குகளுக்கு முன் மெகா சைஸ் பேனர்களை வைப்பது போன்ற தீவிரமாக தங்கள் பணியை தொடங்கி வருகின்றனர். இந்த நிலையில் புயலையும் மீறி  வாரிசு படக்குழு செய்து உள்ள காரியம் ரசிகர்களைஉற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் மெட்ரோ ரயில் முழுவதும் வாரிசு படத்தில் போஸ்டர்களை ஒட்டி அதிரி புதிரி செய்துள்ளது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத துணிவு படக்குழு தங்கள் தரப்பிலிருந்து என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து ஆலோசனை நடத்த வருகிறது.

இதே போன்று வாரிசு படக்குழு இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த முடிவெடுத்துள்ளது. ஆனால் துணிவு படத்திற்கு அப்படி எந்த ஒரு விழாவும் நடத்த அஜித் சம்மதம் தெரிவிக்கவில்லை. அப்படி விழா நடத்தினாலும் அதில் நான் பங்கேற்க போவதில்லை என்றும் அதை கூறி விட்டதால் வாரிசு தரும் நெருக்கடியை எப்படி சமாளிக்க போகிறோம் என்று ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் தடுமாறி வருகிறது.இந்த நிலையில் முதல் நாள் வசூலில் அதிகப்படுத்துவதற்காக வாரிசை விட ஒரு நாள் முன்பாக துணிவு படத்தை திரையிட ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top