Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு கதையை கேட்டு அழுதுவிட்டேன்.. சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உருக்கம்

வாரிசு கதையை கேட்டு அழுதுவிட்டேன்.. சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உருக்கம்

- Advertisement -

தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதற்காக டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் குறைந்தபட்சம் டிக்கெட் விலையே 300 ரூபாயாகவும் அதிகபட்சம் 2000 ரூபாய் என்று அளவுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வம்சி கூறியுள்ளார்ம் டிரைலர் பெரும் அளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஃபேமிலி சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் படம் பிளாக்பஸ்டர் ஆகும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் சண்டை பயிற்சியாளர்கள் ஒருவரான பீட்டர் ஹெயின் கூறிய கருத்து விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

பேட்டி ஒன்றில் கூறியுள்ள பீட்டர் ஹெயின், விஜய் உடன் நான் பல்வேறு படங்களில் பணிபுரிந்து இருக்கிறேன். ஆனால் அப்போதுள்ள விஜய்க்கும் இப்போதுள்ள விஜய்க்கும் பல மாற்றம் உள்ளது. தற்போதுள்ள விஜய் நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறார். சண்டை காட்சிகளில் அவருடைய செயல்பாடு நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
வாரிசு திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் வெறும் சண்டை காட்சிகளாக இல்லாமல் எமோஷனல் கலந்த காட்சிகளாக இருக்கும்.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை வாரிசு திரைப்படம் உண்டாக்கும். வாரிசு திரைப்படத்தின் கதையை இயக்குனர் வம்சி என்னிடம் கூறும்போது, என்னை அறியாமல் நான் அழ தொடங்கி விட்டேன். ஒரு சண்டை பயிற்சியாளர் என்பதை மீறி ஒரு சாதாரண ரசிகனாக என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவு போராட்டமாக வாரிசு இருக்கும். சென்டிமென்ட் நிச்சயம் ரசிகர்களுடைய ஒர்க் அவுட் ஆகும் படத்தின் அடித்தளமே அதுதான் என்பதால் ரசிகர்களிடையே வாரிசு நல்ல வரவேற்பை பெறும் என்பதில் பிட்டர் ஹெயின் கூறியுள்ளார்.

Most Popular