Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாபொங்கல் தினத்தில் துணிவை அடிச்சி தூக்கிய வாரிசு.. ஹிந்தியிலும் சாதனை..எவ்வளவு வசூல்?

பொங்கல் தினத்தில் துணிவை அடிச்சி தூக்கிய வாரிசு.. ஹிந்தியிலும் சாதனை..எவ்வளவு வசூல்?

- Advertisement -

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி துணிவு வாரிசு திரைப்படம் ஒரே நாளில் திரையரங்கில் வந்தது. இதில் எந்த படம் அதிக வசூலை பெற்று வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 5 நாள் முடிவில் தற்போது அதற்கான ரிசல்ட்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் நாள் வசூலில் வாரிசை விட 75 லட்சம் ரூபாய் அதிக வசூலை துணிவு பெற்றது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வாரிசு தான் வசூலில் முந்தி வருகிறது.

இதற்கு காரணம் விஜயின் குடும்ப ரசிகர்கள் அதிகளவு திரையரங்குகளை நோக்கி வந்ததால் வாரிசுக்கு அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்டு, துணிவு காட்சிகள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக வாரிசு வசூல் அதிகரித்து வருகிறது. நேற்று பொங்கல் தினமான முதல் ஞாயிற்றுக்கிழமையில் தமிழகத்தில் வாரிசு 18 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே சமயம் அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று 13 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் யாரும் எதிர்பாராத விதமாக வாரிசு ஹிந்தி படம் ஹிட் அளித்துள்ளது. இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிக வசூலை அந்த படம் குவித்துள்ளது. வட இந்தியாவில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடுகிறது. இதைப் போன்று வாரிசுவின் தெலுங்கு திரைப்படமும் நல்ல வசூலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக வாரிசு , துணிவு வசூல் இடைவெளி அதிகமாக இருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவில் சேர்த்து வாரிசு திரைப்படம் 11 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து உள்ளது துணிவைப் பொருத்தவரை 8 லட்சம் டாலர் வசூல் பெற்றிருக்கிறது. இது முந்தைய அஜித் படத்தை காட்டிலும் பெரிய வசூல் ஆகும்.

- Advertisement -

இதே போன்று நார்வேயில் வாரிசு படத்தை  3800 பேர் பார்த்திருக்கிறார்கள். இதுவே துணிவு படத்தை 700 பேர் இதுவரை பார்த்திருக்கிறார்கள் என்று அந்த திரைப்படங்களில் விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். இலங்கை ,மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் வாரிசு வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது.இதன் காரணமாக இந்த பொங்கல் பந்தயத்தில் வாரிசு முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று அஜித்தின் முந்தைய படங்களை விட துணிவு திரைப்படம் அதிக வசூல் பெரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Most Popular