தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர் ஆக விளங்கும் நடிகர் விஜய் தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்காக இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டவர்களுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் தெலுங்கு டைட்டில் வாரிசுடு என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தை பன்னிரெண்டாம் தேதி ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருந்தது .ஆனால் துணிவு திரைப்படம் 11-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் வாரிசு தங்களுடைய தேதியை மாற்றி விட்டனர்.
இந்த நிலையில் சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ஆக விளங்கும் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அவர்களுடன் இணைந்து வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் போட்டியிட இருந்தது. இந்த நிலையில் தெலுங்கு படத்தின் வெளியிட்டு தேதியை தள்ளிவைக்க தில் ராஜு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் தெலுங்கு மொழிக்கான பட வேலைகள் இன்னும் முடிவடையாதது இதற்கு முதல் காரணம் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு சினிமாவில் பெரிய ஹீரோக்கள் படங்களுடன் மோதினால் விஜயின் வசூல் பாதிக்கும் என்பதால் வேறொரு தேதியில் படத்தினை ரிலீஸ் செய்ய தில் ராஜு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமான செய்தி இல்லை என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளனர். வாரிசு தெலுங்கு படத்தின் டப்பிங் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 11 ஆம் தேதியை கொண்டு வர படக்குழு பகல் இரவாக வேலை செய்து வருகிறார்கள். வாரிசு தெலுங்கு படத்தின் டப்பிங் பதினொன்றாம் தேதி வெளியானால் முதல் நாள் வசூல் உட்பட வாரிசு படத்தின் வசூல் அதிகமாக வர வாய்ப்புள்ளது.
எப்போதுமே விஜய் தன்னுடைய தெலுங்கு டப்பிங் தமிழ் படத்தினுடைய சேர்த்து ரிலீஸ் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது வாரிசுடு படம் அந்தப் பாணியில் இருந்து விலக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜயின் மார்க்கெட் தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தெலுங்கு மார்க்கெட்டில் முதல் நாளில் ரூ.8.3 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.