சினிமா

வாரிசு மூலம் எனக்கு 2 விசயம் கிடைச்சிருக்கு..தில் ராஜூ உருக்கம்

சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் வாரிசு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தில்ராஜு, இயக்குனர் வம்சி ,நடிகர் சரத்குமார், நடிகர் ஷாம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு ,வாரிசு திரைப்படம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுப்பதாக கூறியுள்ளார். சில படங்கள் தயாரித்தால் பணம் கிடைக்கும். சில படங்கள் தயாரித்தால் மரியாதை கிடைக்கும். ஆனால் வாரிசு படம் செய்ததன் மூலம் எனக்கு பணமும் மரியாதையும் இரட்டிப்பாக கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement

வாரிசு திரைப்படத்தை பார்த்து பலரும் தம்மை தொடர்பு கொண்டு பாராட்டியதாக தில்ராஜ் கூறியுள்ளார். தாம் தெலுங்கு ஹீரோக்களை வைத்து பல்வேறு குடும்ப படங்களை எடுத்ததால் விஜயை வைத்து இப்படி ஒரு சப்ஜெக்ட்டில் நடிக்க வைத்தால் என்ன என்று தோன்றியதாகவும் அதன் பிறகு வாரிசு திரைப்படம் உருவானதாகவும் தில் ராஜு கூறியுள்ளார். விஜய் பல ஆக்சன் படங்கள் நடித்தாலும் தமக்கு பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் தான் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷியாம் திரைப்படத்தை பார்க்கும் பலரும் நெகிழ்ச்சி அடைந்து கண்களில் தண்ணீர் வந்து விடுவதாக கூறியுள்ளார். இந்த படத்திற்காக பாடல் ஆசிரியர் விவேக் சிறப்பாக பணியாற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதேபோன்று நடிகர் சரத்குமார் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார் .

Advertisement

விஜய் குறித்து பேசிய ஷியாம், தாம் நடித்த போது விஜய் யார் பற்றியும் குறையோ புகாரோ என்னிடம் தெரிவிக்கவில்லை .இந்த குணம் எனக்கு விஜய் இடம் மிகவும் பிடித்ததாக அவர் தெரிவித்தார். இதேபோன்று தயாரிப்பாளர்  ராஜு தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் எனவும் ஷாம் அழைப்பு விடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top