ஸ்மார்ட் போன் இல்லாத காலங்களில் எல்லாருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்றால் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் தான். அது தற்பொழுது காலத்தில் குறைந்து எது வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். இதனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் கூட யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை.
எனினும் ஓடிடி, கிரிக்கெட் காலத்தில் கூட, பண்டிகை நாட்களில் திரைப்படத்தை டிவியில் பார்ப்பது தனி சுகம் தான்.இந்த நிலையில் தான் திரையரங்கில் வெளியிடப்பட்டு 300 கோடி அளவில் வசூலை பெற்ற வாரிசு திரைப்படம் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.இதில்19 . 6 என்ற அதிகபட்ச டிஆர்பிஐ பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு தல அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் 18.1 என்ற டிஆர்பிஐ பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை முறியடித்து தற்பொழுது அந்த இடத்தை வாரிசு திரைப்படம் பிடித்திருக்கிறது.
17 .6 என்ற டிஆர்பியை பெற்று விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 16.9 என்ற டிஆர்பியை பெற்று தளபதி விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் நான்காவது இடத்தில் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த சீம ராஜா16.7 என்ற டிஆர்பி யை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம்16.4 என்ற டிஆர்பியை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம்15.9 என்ற டிஆர்பியை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.நடிகர் சூர்யா நடித்த சிங்கம் 3 திரைப்படம்15.5 என்ற டிஆர்பியை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம்14.7 என்ற டிஆர்பியை பெற்று ஒன்பதாவது இடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படமும் மற்றும் தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படமும்14.5 டிஆர்பிஐ பற்றி பத்தாவது இடத்திலும் இருக்கிறது.