Wednesday, April 17, 2024
- Advertisement -
Homeசினிமாவாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி எப்போது? அதிருப்தியில் ரசிகர்கள்

வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி எப்போது? அதிருப்தியில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் உள்ள துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. இந்த நிலையில் தளபதி விஜய் படத்தின் வாரிசு ட்ரெய்லர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். புத்தாண்டு தினமான இன்று வாரிசு திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் தற்போது ஒரு சூப்பர் அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது. வாரிசு படத்தின் டிரைலர் பின்னணி இசை கோர்க்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக வாரிசு ட்ரெய்லர் வரும் நான்காம் தேதி புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு டிரெய்லர் கதை இதுதான் என வெளிப்படையாக கூறி வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் வாரிசு படத்தின் கதையை வெளியிடலாமா அல்லது கதையை சொல்லாமல் ட்ரைலரை வெளியிடலாமா என்ற குழப்பத்தில் பட குழு இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாகவே ட்ரெய்லர் வெளியிட்ட தேதி இரண்டாம் தேதியிலிருந்து நான்காம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே துணிவு திரைப்படம் 24 நேரத்தில் மூன்று கோடி பேர் யூடியூபில் பார்த்திருக்கிறார்கள். மேலும் 11 லட்சம் பேர் துணிவு பட டிரைலருக்கு லைக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் எண்ணிக்கை பொறுத்தவரை இது பீஸ்ட் படத்தின் சாதனையை சமன் செய்துள்ளது. எனினும் லைக்ஸ் பொறுத்தவரை பீஸ்ட் படம் 21 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் படைத்த ரெக்கார்டை வாரிசு உடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சன் டிவியில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகி வருகிறது. இது பார்வையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ட்ரெய்லரை நான்காம் தேதி வெளியிட பட குழு முடிவு எடுத்துள்ளது.

Most Popular