Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாகுடும்பங்கள் கொண்டாடும் வாரிசு.. டிரைலர் எப்படி இருக்கு? ஆட்ட நாயகனா வாரிசு?

குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு.. டிரைலர் எப்படி இருக்கு? ஆட்ட நாயகனா வாரிசு?

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் ட்ரெய்லர் இன்று ரிலீஸ் ஆனது. இதில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தானா, யோகி பாபு, சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். இதில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருக்கிறது.

படத்தில் விஜய் பெரிய பணக்காரரின் பையனாக நடித்திருக்கிறார். தந்தை சரத்குமார் தொழிலில் சிக்கல் ஏற்படும் போது அதனை விஜய் எப்படி சமாளிக்கிறார். குடச்சல் கொடுக்கும் பிரகாஷ் ராஜை எப்படி திருப்பி அடிக்கிறார் என்பதை கதைக்களமாக வாரிசு உள்ளது. குடும்பங்களை மையப்படுத்தி விஜய் திரைப்படம் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

- Advertisement -

அதனால் குடும்பமாக திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக விஜய் இந்த படத்தை தேர்வு செய்து இருக்கிறார். இதேபோன்று படத்தின் சண்டைக் காட்சிகளும் அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. வழக்கம் போல் நடிகர் விஜய் சண்டையில் தூள் கிளப்பு இருக்கிறார். விஜய்யிடம் பூவே உனக்காக படத்தின் வசனத்தை யோகி பாபு பேசுவதும், அதற்கு விஜய் பதில் கொடுப்பதும் என சில நகைச்சுவை காட்சிகளும் டிரைலரில் இருக்கிறது.

- Advertisement -

எனினும் விஜய்யின் முந்தைய படங்கள் போல் வாரிசு விறுவிறுப்பாக இருக்குமா என தெரியவில்லை. குடும்ப படம் என்றாலே படத்தின் கதை கொஞ்சம் மெதுவாக தான் இருக்கும். திரைக்கதையை யூகிக்க முடியும். அதனை மட்டும் வாரிசு சரி செய்து விட்டால் படம் நிச்சயம் ஹிட் ஆகும்.

மேலும் வம்சி தெலுங்கு இயக்குனர் என்பதால் அந்த பாணி கொஞ்சம் படத்தில் தெரிகிறது. எனினும் டிரைலரை வைத்து எதையும் விமர்சிக்க முடியாது என்பதால் பொங்கல் பண்டிகையின் போது படம் எப்படி இருக்குது என்பது தெரியும். வாரிசு குடும்பப் படமாகவும் துணிவு ஆக்சன் படமாகவும் அமையும் என்பதால் படத்தின் முடிவுகளை சினிமா ரசிகர்களான உங்கள் கையிலே இருக்கிறது.

Most Popular