சினிமா

கூடுதல் தியேட்டரால் கூடுதல் வசூல்.. தமிழகத்தில் துணிவு, இந்திய அளவில் வாரிசு முதலிடம்

ஜனவரி 11-ம் தேதி தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களின் வாரிசு, துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஏதாவது ஒரு படம் மண்ணை கவ்வும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு திரைப்படங்களுக்குமே நல்ல விமர்சனங்கள் கிடைத்து இருக்கிறது. இதன் காரணமாக முதல் நாள் வசூல் விண்ணை முட்டும் அளவுக்கு இதுவரை இல்லாத அளவில் இருக்கிறது. இவ்விரண்டு படங்களும் தனித்தனியே வந்திருந்தால் பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும்.

இதுவரை முதல் நாள் வசூல் என்ன என்பது குறித்து இரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் வாய் திறக்கவில்லை. இருப்பினும் திரைப்பட வணிக நிபுணர்கள் வெளியிட்டுள்ள கணிப்புகளை தற்போது பார்க்கலாம். திருச்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துணிவு திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. 63. 7 லட்சம் ரூபாய் வசூலை படைத்திருக்கிறது. வாரிசு 35 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூல் படைத்திருக்கிறது. இதற்கு காரணம் திருச்சியில் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு திரையிடப்பட்ட நிலையில் வாரிசுக்கு நான்கு திரையரங்குகள் தான் கிடைத்தது.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் துணிவு திரைப்படம் 21 கோடியையும் வாரிசு திரைப்படம் 19 கோடியையும் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் வாரிசு விட துணிவு அதிக காட்சிகள் போடப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் துணிவை பின்னுக்கு தள்ளி வாரிசு முதலிடத்தை பிடித்திருக்கிறது. எனினும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. தெலுங்கில் இன்னும் வாரிசு திரைப்படம் தமிழில் கூட ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அமெரிக்காவில் வாரிசு திரைப்படத்திற்கு கடைசி நேரத்தில் தான் பிரிவியூ காட்சிகள் போடப்பட்டது. இதன் காரணமாக அங்கும் துணிவு கூடுதல் வசூலை பெற்றிருக்கிறது. எனினும் இன்றிலிருந்து அங்கு வாரிசு முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று சிங்கப்பூரில் வாரிசு திரைப்படம் மதியம் 2 மணியிலிருந்து தான் திரையிடப்பட்டது. இதன் காரணமாகவும் அங்கு துணிவு திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது. துபாயிலும் வாரிசு திரைப்படத்திற்கு பிரிவியூ காட்சிகள் திரையிடப்படவில்லை. இதனால் அங்கேயும் துணிவு தான் முதலிடத்தில் உள்ளது.
எனினும் வார இறுதி நாட்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. நாம் ஏற்கனவே கணித்தது போல் தமிழகத்தில் துணிவு முதல் இடத்திலும் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வாரிசு முதல் இடத்திலும் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top