Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாவாத்தி மூன்று நாள் வசூல் நிலவரம்-  சிம்புவை விட பின் தங்கிய தனுஷ்

வாத்தி மூன்று நாள் வசூல் நிலவரம்-  சிம்புவை விட பின் தங்கிய தனுஷ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகராக அறியப்படும் தனுஷ் ஹாலிவுட் ,பாலிவுட் என கலக்கி வருகிறார். தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சார் என தெலுங்கில் திரைக்கு வந்துள்ளது. முதல் நாள் தனுஸ் ரசிகர் படம் ஆகோ ஓஹோ என்று கூறினார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தனுஷின் நடிப்பு மட்டும்தான் படத்தை தூக்கி நிறுத்துவதாக பலரும் கூறியுள்ளனர். வெறும் படத்தின் கருத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாகவும் தற்போது பொதுவான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் நாள் படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்ததால் படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நன்றாகவே இருந்தது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் நாள் வசூல் 4 கோடியே 80 லட்சம் ரூபாயும், சனிக்கிழமை 5 கோடியே 5 லட்சம் ரூபாயும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 5 கோடியே 65 லட்சம் பணம் வசூல் படைத்து இருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் முதல் மூன்று நாள் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு வாத்தி திரைப்படம் தமிழகத்தில் வசூலை படுத்திருக்கிறது. தமிழகத்தில் வாத்தி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய வேண்டும். தற்போது முதல் மூன்று நாட்களில் பாதி பணத்தை எடுத்து விட்டார்கள்.இதனால் மீதி பாதியை படக்குழுவினர் எடுத்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் வாத்தி ஹிட் என்ற அந்தஸ்தை பெற்று விடும் என திரைத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

எனினும் நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. எனினும் திருச்சிற்றம்பலம் தவிர நானே வருவேன் திரைப்படம் வெறும் 23 கோடி வசூல் படைத்தது. தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வசூலை வாத்தி முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்களும், பள்ளி தேர்வுக் காலமும் வருவதால் அதனை முறியடிக்க வாய்ப்பு இல்லை. இதனால் நடிகர் தனுசை சிம்பு முந்திவிட்டார் என திரைத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Popular