சினிமா

பெரியார் வழியை பாலோ செய்யும் வாத்தி நடிகை.. ரசிகர்கள் வரவேற்பு

ஜாதி மதம் இல்லை என்று கூறும் மனிதர்கள்தான் இன்று தன்னுடைய பெயரோடு தன்னுடைய ஜாதியையும் இணைத்து அதை ஒரு ஸ்டைலாக நினைத்து வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்.  பெயர் புகழ் பாராட்டு இவற்றிற்கெல்லாம் தன் பெயரை அடையாளப்படுத்திக் கொண்டால் போதும் அதில் என்னுடைய ஜாதி தேவையில்லை என்று சிலர் தன் பெயரில் இணைந்து இருக்கும் தனது ஜாதியின் பெயரை நீக்கி அதி பகிரங்கமாக அறிவித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் தங்களது ஜாதி பெயரை தங்களுடைய பெயருக்கு பின்னால் சேர்க்கும் பழக்கம் இருக்கும் எனில் தமிழகத்தில் அந்த முறையை தந்தை பெரியார் ஒழித்தார். தற்போது ஜாதி பெயரை சேர்த்து வைத்திருக்கும் திரைப்பட பிரபலங்கள் அதனை நீக்கி வருகிறார்கள் .

Advertisement

இதற்கு முன்பு அவன் இவன், தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை ஜனனி ஐயர். இவர் சில நாட்கள் வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரின் பின் ஐயர் என்ற தன்னுடைய ஜாதியின் பெயரை நீக்கி என்னை வெறும் ஜனனி என்று அழையுங்கள் அதுவே எனக்கு விருப்பமாக உள்ளது என்று கூறி தன் பெயரின் பின் இருக்கும் ஐயர் என்ற அடைமொழியை நீக்கி  புரட்சி செய்து இருந்தார்.

அதேபோல் தற்பொழுது தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் கதாநாயகியான சம்யுக்தா மேனனும் தற்பொழுது இப்படி ஒரு புரட்சியை செய்திருக்கிறார். ஒரு மலையாள நடிகையாக இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் மிகப் பிரபலமான நடிகை என்றால் அது மலையாள சினிமாவில் தான் இவர் தற்பொழுது நடித்திருக்கும் வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமாகிவிட்டார். இவரை அடையாளப்படுத்துவதற்கு ரசிகர்கள் இவரை சம்யுக்தா மேனன் என்று தான் கூறிவருகிறார்கள்.

Advertisement

ஆனால் அதற்கு முற்றுப்பள்ளி வைத்திருக்கிறார் நடிகை சம்யுக்தா. தன் பெயருக்கு பின்னால் மேனன் என்ற ஜாதியின் பெயரை குறிப்பிட வேண்டாம் அதை நான் விரும்பவில்லை என்று சம்யுக்தா கூறியிருக்கிறார். என்னை வெறும் சம்யுக்தா என்று அழையுங்கள் அதுதான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறி தன் பெயரின் பின் இருந்த மேனன் என்று பெயரில் நீக்கி இருக்கிறார் நடிகை சம்யுக்தா. இதற்கு தமிழக ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

இவற்றைப் பார்த்து இன்னும் பல நடிகர், நடிகைகள் தன்னுடைய ஜாதியின் பெயரை நீக்கி தனக்கென்று வைத்த பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்குள்ளே உள்ளும் தோன்ற வேண்டும் அது சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top