சினிமா

வாத்தி முதல் நாள் வசூல்.. விஜய், அஜித்துக்கு பிறகு தனுஷ் மாஸ் ஓபனிங்

நடிகன் தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. கல்வியை வியாபாரமாக மாற்றும் நடை முறையை எதிர்த்து பேசும் படமாக மாற்றி அமைந்துள்ளது. பல எமோஷன் காட்சிகளும், வசனங்களும் படத்தின் இசையும் வாத்திக்கு வலு சேர்த்து இருக்கிறது.

Advertisement

வழக்கம்போல் தனுஷ் திரையில் ஜொலித்திருக்கிறார். தெலுங்கு பட இயக்குனர் இந்த படத்தை இருப்பதால் இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. எனினும் படத்தின் நல்ல விமர்சனம் காரணமாக எதிர்பார்த்ததை விட முதல் நாள் வசூல் அதிகமாகவே வந்துள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்த்து வாத்தி திரைப்படத்தில் முதல் நாள் வசூல் 12 முதல் 13 கோடி ரூபாய் செய்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் வாத்தி திரைப்படம் 7 முதல் 8 கோடி ரூபாய் வசூல் பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய், அஜித்துக்கு பிறகு மூன்றாவது பெரிய ஓப்பனிங் தனுஷ் பெற்றுள்ளார். தமிழகத்தில் வெறும் 17 கோடி ரூபாய்க்கு தான் வாத்தியின் திரையரங்கு உரிமம் விற்கப்பட்டது. இதனால் மாத்தி தமிழ்நாட்டில் முப்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தாலே லாபமாக பார்க்கப்படும்.

Advertisement

இதைப் போன்று தெலுங்கில் வாத்தி திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்தால் அங்கு ஹிட்ட அந்தஸ்தை பெறும். தற்போது வார இறுதி நாட்கள் என்பதால் வாத்தி திரைப்படத்திற்கு கூடுதல் ரசிகர்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் தனுஸ் மகன்கள் கண்டு ரசித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top