சினிமா

வாத்தி ரிவியூ – தனுஷ்க்கு தொடர்ந்து 2வது ஹிட் ! நிறை, குறை என்ன?

நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீசாகிறது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை போல் வாத்தி திரைப்படத்தையும் 7 ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சென்னையில் பிரிவியூ ஷோக்கு திரையிட்டது. இதில் ரசிகர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.ஸ்பெஷல் ஷோ காட்சி பார்த்த பலரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர்.

Advertisement

கல்வியை வியாபாரம் ஆக்கும் சிஸ்டத்தை எதிர்த்து தனுஷ் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக ஜிவி பிரகாஷ் இசை அமைந்துள்ளதும், வசனமும் உள்ளது. மேலும் படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் இருப்பதால் படத்தின் முதல் பாதையில் தேவையில்லாத காட்சிகள் பெரியதாக இல்லை.

எனினும் இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் கொஞ்சம் படம் தோய்வாக இருந்தாலும், எமோஷன் காட்சிகள் எல்லாம் நன்றாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. குறிப்பாக படத்தில் மாணவர்களுக்கிடையே ஜாதியால் எவ்வாறு பிரிந்து கிடக்கிறார்கள் என்பதையும், அதனை தனுஷ் எப்படி தவறு என்று புரிய வைக்கிறார்  என்ற காட்சியும் திரையரங்குகளில் நிச்சயம் க்ளாப்ஸ்களை அல்லும்.

Advertisement

மேலும் முதல் பாதி நல்ல பொழுதுபோக்கும், இரண்டாவது பாதி எமோஷன்களும் கலந்த கலவையாக ஒரு நல்ல திரைப்படமாக வாத்தி இருக்கும். இதன் மூலம் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு இரண்டாவது ஹிட்டை கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கருத்தை பேசும் திரைப்படம் தமிழில் வந்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது. இயக்குனர் வெங்கி அட்லூரி சொன்னது போல் வாத்தி திரைப்படம் தமிழகத்தில் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்கு ஐந்துக்கு 3.25  ஸ்டார்களை வழங்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top