சினிமா

கல்வி வியாபாரம் குறித்து பேசும் தனுஷ்.. வாத்தி டீசர் எப்படி இருக்கு?

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பை லேங்குவல் திரைப்படத்தில் நடிக்கிறார். இது தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. வெங்கி அல்லூரி இந்த படத்தை இயக்குகிறார். இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முதல் முறையாக தனுஷ் ஆசிரியராக நடித்திருக்கிறார். கல்லூரியில் ஜூனியர் லச்சரர் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் தனுஷின் பெயர் பாலமுருகன். இதில் சமுத்திரக்கனி தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார். கல்லூரி மாணவன் போல் தோற்றமளிக்கும் நடிகர் தனுஷ் இந்த படத்தில் கல்வி வியாபாரம் ஆகுவது எதிர்த்து குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார். இந்த டீசரில் கல்வி என்பது கோயிலில் இருக்கும் பிரசாதம் மாதிரி. அதை ஹோட்டலில் கொண்டு போய் பார்சல் போட்டு விற்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் வசனம் பேசி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதேபோன்று ஜீரோ பீஸ் ஜீரோ எஜுகேஷன் மோர் பீஸ் மோர் எஜுகேஷன் என்று சமுத்திரக்கனி வசனம் ஒன்றும் டீசரில் இடம் பெற்றுள்ளது.இதன் மூலம் கல்வி வியாபாரம் ஆகுவது எதிர்த்து வாத்தி திரைப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரில் நடிகர் தனுஷ் பாரதி வேடத்தில் வந்து வில்லன்களை அடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் சண்டை காட்சிகளில் சிறந்த விளங்குபவர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

இந்தப் படத்தில் தனுஷ் புரூஸ்லி போல் எதிரிகளை ஒரு கிக் விடுகிறார். அந்த காட்சியும் டீசரில் இடம் பெற்றுள்ளது.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளிவந்தத இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியான சில மணி நேரங்களில் அதனை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தமிழில் கண்டு களித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top