Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசினிமாகோட் படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது.. முதல் பாடல் கூட இப்போதைக்கு இல்லை.. இயக்குனர் வெங்கட்...

கோட் படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது.. முதல் பாடல் கூட இப்போதைக்கு இல்லை.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு.. !

தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ தி கிரேட்ஸ்ட் ஆப் ஆல் டைம் ’ ஆகும். இப்படத்தில் விஜய்யுடன், பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், ஜெயராம், ஸ்னேஹா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு, விடிவி கணேஷ் என பெரிய படையே நடிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் படம் இறுதிக் கட்டப் பணியில் உள்ளது.

- Advertisement -

தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஷூட்டிங். ஜோ பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் வெங்கட், செய்தியாளர்கள் சந்திப்பில் கோட் படத்தின் சில சிறிய அப்டேட்களை வழங்கினார்.

அவர் கூறியதாவது, “ அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இது நிச்சயமாக ஹாலிவுட் ரீமேக் படமல்ல. முழுக்க முழுக்க புதிய ஐடியா தான். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது, இந்த மாதத்துடன் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவு பெற்றுவிடும். அதன் பின்னர் வெளிநாட்டு ஷூட்டிங் மட்டும் பாக்கியுள்ளது. ” என்றார்.

- Advertisement -

மேலும், “ படத்தின் முதல் பாடல் வெளியாக எப்படியும் மே மாதம் ஆகிவிடும். படத்தில் நிறைய பாடல்களும் உள்ளன. ” என ஒரு சிறிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அஜித், விஜய் இருவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள வெங்கட் பிரபு தன் அனுபவத்தையும் கூறியுள்ளார்.

- Advertisement -

“ விஜய் அஜித் இருவருடன் பணியாற்றுவது துவக்கத்தில் பயமாக இருந்தது. இரண்டு பேருமே இயக்குனர்களின் நடிகர்கள் தான். மேலும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருப்பார்கள், அவர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. ” என்றார் வெங்கட் பிரபு. கோட் திரைப்படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என முன்னர் செய்திகள் வந்தன.

ஆனால் அண்மையில் வெங்கட் பிரபு, படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் நேரம் தேவைப்படும் எனவும் அதனால் இப்போதைக்கு அது குறித்து எதுவும் சொல்ல இயலாது என்றார். இந்தத் திரைப்படம் தளபதி விஜய்யின் கேரியரில் புதிய அனுபவமாக இருக்கும் என்கின்றனர்.

Most Popular