Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் வெற்றிமாறன் படம் எப்போது? அடுத்த 3 ஆண்டுக்கான படங்களை வெளியிட்டார்

விஜய் வெற்றிமாறன் படம் எப்போது? அடுத்த 3 ஆண்டுக்கான படங்களை வெளியிட்டார்

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய எந்த ஒரு படமும் தோல்வி அடைந்ததில்லை என்ற பெருமை அவருக்கு உள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜயுடன் வெற்றிமாறனும் இணைந்து எப்போது படம் செய்ய உள்ளார்கள் என்பதைத்தான் அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து வெற்றிமாறன் கேட்கப்பட்டபோது நிச்சயம் அது நடக்கும் என கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால் வெற்றிமாறன் அதற்கு சில காலம் விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெற்றிமாறன் தற்போது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க உள்ள படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதில் விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் நடப்பாண்டிலை தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவுடன் இணைந்து வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் .

இந்த படம் 2024 ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 2025 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வட சென்னை படத்தில் இரண்டாவது பாகத்தை இயக்குனர் வெற்றிமாறன் எடுக்க உள்ளார்.இதன் மூலம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெற்றிமாறன் பிசியாக இருக்கிறார்.

அதன் பிறகு ஜூனியர் என்டிஆர் உடன் தெலுங்கில் ஒரு படம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதன் உறுதி தன்மை என்னும் வெளியாகவில்லை. இதனால் நடிகர் விஜயை வைத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் படம் அடுத்த நான்கு ஆண்டுகளில் நடைபெற வாய்ப்பு இல்லை என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றிமாறன் விடுதலை 2 முடிப்பதற்குள் சூர்யா தன்னுடைய 42வது படத்தை முடித்துவிட்டு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular