தமிழ் சினிமாவில் தோல் படமே கொடுக்காத இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ள வெற்றிமாறன் தற்போது விடுதலை படம் மூலம் மீண்டும் கொடி கட்டி பறந்து வருகிறார். விடுதலை படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
கிட்டதட்ட ஒரு வாரத்தில் விடுதலை 25 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் மட்டும் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விடுதலை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. இந்த படம் விரைவில் வருமா, இல்லை வட சென்னை போல் வெற்றி மாறன் டிமிக்கு கொடுத்து விடுவாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர்.
இந்த நிலையில், ருத்ரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை படத்தின் 2வது பாகத்தை முடிக்க இன்னும் 10 நாள் தான் சூட்டிங் தேவைப்படுகிறது. முதல் பாகம் எடுக்கும் போதே பெரும்பாலான காட்சிகளை இரண்டாவது பாகத்திலும் எடுத்து முடித்துவிட்டேன்.
இதனால் விடுதலை படத்தின் 2வது பாகம் இன்னும் 4 மாதங்களில் வெளியாகும் என்று கூறிய வெற்றிமாறன், அதன் பிறகு வாடிவாசல் படத்திற்கான பணியை தொடங்க உள்ளதாக கூறினார். வாடிவாசல் முடிந்த உடன், நிச்சயம் தனுஷை வைத்து வட சென்னை 2வது பாகத்தை தான் இயக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
வெற்றிமாறனின் இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தனுஷ் ரசிகர்கள் இந்த பேச்சுக்கு ஃபயர் விட்ட வருகிறார்கள். இந்த 3 படங்களையும் முடித்த உடன் தான் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் அந்த படம் எடுக்கப்பட உள்ளது. ஆம், நடிகர் விஜயும், வெற்றிமாறனும் இணைந்து படத்தில் பணியாற்ற போகிறார்கள் என்பதை இயக்குனர் தமிழ் ஏற்கனவே கூறிவிட்டார்.
எனினும் இந்த படங்களை முடிக்க வெற்றி மாறன் எப்படியும் காலத்தாமதம் செய்துவிடுவார். இதனால் சூர்யா ரசிகர்கள் 2 ஆண்டும், தனுஷ் ரசிகர்கள் 3 ஆண்டும், விஜய் ரசிகர்கள் 5 ஆண்டும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.