Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாமுனைவர் பட்டம் பெற்று வெற்றிமாறன் தாயார் சாதனை… என்னை படிக்க வைத்ததே எனது மகன் எனக்கூறி...

முனைவர் பட்டம் பெற்று வெற்றிமாறன் தாயார் சாதனை… என்னை படிக்க வைத்ததே எனது மகன் எனக்கூறி நெகிழ்ச்சி

இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் “சி சு செல்லப்பா” எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

- Advertisement -

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய “அசுரன்” மற்றும் “விசாரணை” படங்களும் தற்போது வெளியாகியுள்ள “விடுதலை” படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் “வாடிவாசல்” படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ள வெற்றிமாறன், படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார். இந்தாண்டு இறுதிக்குள் வாடிவாசல் திரைப்பட ஷூட்டிங் பணிகளையும் அவர் தொடங்க இருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் ஒருவராக வெற்றிமாறன் ஜொலிக்க, அவரது தாயார் மேகலா சித்ரவேலும் நாவல்கள் எழுதுவதில் புலமை பெற்றவராக திகழ்கிறார். கமலி அண்ணி, வசந்தமே வருக, மழை மேக மயில்கள்,
ரதிதேவி வந்தாள் என பல்வேறு நாவல்களை எழுதியிருக்கும் அவர், எம்ஜிஆர் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் மேகலா சித்ரவேல் கலந்துகொள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன், தனது தாயார் பட்டம் பெறுவதை பார்த்து மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் மேகலா சித்ரவேல், தன்னை படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான் எனக்கூறி நெகிழ்ந்தார். பேராசிரியர் பிரபாகரின் வார்த்தைகளால் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், தனது மகன்தான் 4 ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டி படிக்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கு வயது ஒரு தடையே இல்லை எனக்கூறிய அவர், அடுத்ததாக பி.எச்.டி படிக்க இருப்பதாகவும், இதற்கு தனது மகன் வெற்றிமாறன்சம்மதித்துள்ளதாகவும் கூறினார்.

தங்கள் வீட்டுக்குள் சினிமா வரவே வராது என்று கூறிய அவர், அம்மா என்றால் சமையலறைக்குள் வைக்க வேண்டும் என நினைக்காதீர்கள் என்றும், அவர்களுக்கான உரிமையை கொடுத்துவிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

Most Popular