Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவடசென்னை 2 திரைப்படம் எப்போது? வெற்றிமாறன் சொன்ன அப்டேட்

வடசென்னை 2 திரைப்படம் எப்போது? வெற்றிமாறன் சொன்ன அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு நடிகர் – இயக்குனர் கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக விளங்கும். கமல்- பாலச்சந்தர், ரஜினி -எஸ் பி முத்துராமன்,விஜய் -ஏ .ஆர் முருகதாஸ் போன்ற வெற்றிக் கூட்டணி வரிசையில் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி மிகவும் பிரபலமானவை. இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றிய பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய 4 படங்களும் மெகா ஹிட் ஆனதை அது மட்டும் இல்லாமல் இந்த கூட்டணி தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.

தனுஷ் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் வடசென்னை இது தனுசுக்கு மிகப் பெரிய ஓபனிங் கொடுத்தது. வடசென்னை திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஏனெனில் முதல் பாதத்திலே படம் கிளைமாக்ஸ் இல்லாமல் பாதியில் முடிவது போல் அமையும்.

- Advertisement -

இந்த நிலையில் விரைவில் வட சென்னை 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இந்த கூட்டணி வடசென்னை 2-வை எடுக்காமல் அசுரன் என்ற படத்தை எடுத்து அதிலும் பெயர் பெற்றது. இதனால் வட சென்னை 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது அதற்கான விடையை வெற்றிமாறனே கொடுத்துள்ளார்.

- Advertisement -

தற்போது விடுதலை, வாடிவாசல் என இரண்டு படங்களின் பணியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட வெற்றிமாறன், அது முடிந்தவுடன் வடசென்னை 2 திரைப்படத்தை நிச்சயம் தொடங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார் வெற்றிமாறனின் இந்த பதில் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.எனினும் வாடிவாசல் திரைப்படம் முடியவே இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பதால் நிச்சயம் வடசென்னை 2 திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் ரிலீஸ் ஆகும் என்பது கொஞ்சம் சோகமான செய்தியே.

Most Popular