Thursday, April 3, 2025
- Advertisement -
Homeசினிமாஅஜித் ரசிகர்களை வைத்து காமெடி பண்ணாதீங்க? உண்மையா? பொய்யா?

அஜித் ரசிகர்களை வைத்து காமெடி பண்ணாதீங்க? உண்மையா? பொய்யா?

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த தகவல் ஏறுத்தாழ ஆறு மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவனுடன் தான் தல அஜித் நடிக்கப் போவதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை மாற்றி இயக்குனராக மகிழ் திருமேனி உறுதி செய்தார்கள் .அஜித்திற்கு ஒரு சிறந்த வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மகிழ்திருமேனி ஏறத்தாழ இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு கதையை எழுதினார். பிறகு இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக பல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டது.

துரதிர்ஷ்ட வசமாக தல அஜித்தின் தந்தையின் மரணம் ஏற்பட்டது .இதனால் ஒரு சில நாட்கள் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. மீண்டும் இத்திரைப்படத்தை மே மாதம் 21ஆம் தேதி தொடங்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

- Advertisement -

இதற்கு இடையில் தல அஜித் தன்னுடைய லட்சியமான உலகம் முழுவதையும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி பார்க்க சென்று விட்டார். மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் மீது வருமானவரித்துறையினர் சோதனையையும் நடத்த தொடங்கி விட்டார்கள். இப்படி பல காரணங்களினால் இத்திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு இன்றுவரை தொடங்காமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இத்திரைப்படத்தினுடைய படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது . இதனை டேவிட் மூலம் மகிழ் திருமேணி பெயரில் டிவிட்டரில் பதிவு ஒன்று வெளி வந்துள்ளது. ஆனால் அது அவருடைய டிவிட்டர் பக்கமா இல்லை போலியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனிடையே திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் லொகேஷன் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரக்கூடிய நாட்களில் இந்த தடைகளும் இன்றி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

விடாமுயற்சி என்ற திரைப்படத்தின் பெயருக்கு ஏற்ப திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதிலேயே பட குழுவினர்கள் விடாமுயற்சி தான் எடுத்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷாவின் நடிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்கள்.

நடிகை திரிஷா திரைப்படம் எடுத்த தாமதமாவதால் இத்திரைப்படத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக கௌரவ நாராயணன் இயக்கம் திரைப்படத்தை ஒப்புக்கொண்டாராம் நடிகை திரிஷா.

Most Popular