தமிழ் சினிமாவில் தனக்கு என்று எப்போதுமே ஒரு ரசிகர் படையை மாறாமல் வைத்திருக்கும் மனிதன் என்றால், அது அஜித் தான். தல அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக மிகப்பெரிய பிரேக் எடுத்துக் கொண்டார்.
சினிமாவில் மட்டும் நடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளாத அஜித்,பைக் பயணம் துப்பாக்கி சூடு என பல பிரிவுகளில் தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் மீண்டும் வெளிநாட்டு பைக் பயணத்தில் ஈடுபடுவதால் அவருடைய அடுத்த திரைப்படமான விடாமுயற்சி கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அஜித் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவன தரப்பில் இருந்தோ இயக்குனர் தரப்பில் இருந்தோ வரவில்லை. இதனால் படம் இருக்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள் என அஜித் ரசிகர்களை கடுப்பாகி விட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது விடாமுயற்சி குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்திருக்கிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் நிச்சயமாக நடைபெறுகிறது. லைக்கா நிறுவனம் திரைக்கதையில் முழு எழுத்து வடிவமாக கொடுங்கள் என இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கூறி இருக்கிறது.
மேலும் படத்தை மெருகேற்ற சில நாட்கள் வேண்டும் என மகிழ் திருமேனி கேட்டுக் கொண்டதால்தான் இந்த தாமதம் என தெரியவந்துள்ளது. தற்போது படத்தின் கதை அனைத்தும் முடிவடைந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்க போகிறார்கள் என்பதை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பிறகு செப்டம்பர் இறுதியில் விடாமுயற்சி திரைப்படம் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.மேலும் படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் துபாயில் எடுக்க பட குழு திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் துபாயில் எந்தெந்த இடங்களில் படத்தின் சூட்டிங் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு எடுக்க பட குழு தற்போது அங்கே சுற்றி வருகிறது. இதனால் விடாமுயற்சி படம் கைவிடப்படவில்லை என்பது தற்போது தெளிவாகிவிட்டது.