சினிமா

அடுத்தடுத்த சிக்கலில் வெற்றிமாறனின் விடுதலை.. ! பிரச்சினைகளை தாண்டி வெல்லுமா.. ?

Vetrimaaran Viduthalai

இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான ‘ விடுதலை ’ படத்தின் முதல் பாகம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகிறது. ஜெயமோகன் எழுதிய துணைவன் கதையை திரைக்கதையாக மேம்படுத்தி படமாக்கியுள்ளனர் வெற்றிமாறன். இத்திரைப்படம் 2 பாகங்களாக தயாராகியுள்ளது. சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி எதிர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இசையை இசைஞானி இளையராஜா கையாண்டுள்ளார்.

போலீஸ் அறாஜகத்தில் தவிக்கும் மக்களுக்காக போராடும் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு எதிராக நடத்தப்படும் ஆபரேஷனில் முக்கிய நபராக ஹீரோ சூரி வருகிறார். இவர்களுக்கு இடையே நடக்கும் போரே கதை. முதல் பாகத்தில் சூரி நிறைய ஸ்கிரீன் ஸ்பேஸ் கொண்டுள்ளார் மற்றும் விஜய் சேதுபதி குறைந்த நேரம் மட்டுமே காணப்படுவார்.

Advertisement

வெற்றிமாறன் விடுதலை சென்சாருக்கு சென்று திரும்பியுள்ளது. முதல் பாகத்தின் நேரம் சரியாக 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். படத்திற்கு ‘ ஏ ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிரைலரில் காணும் போதே வயலன்ஸ் அதிகமாக இருந்தது. வெற்றிமாறனின் படங்கள் தத்ரூபமாக நேரில் நாம் உணரும் ஃபீலை கொடுக்கும். யு/ஏ சான்றிதழுக்காக அதை அவர் மறைக்க விரும்பவில்லை.

இது அவரை போற்றும் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தியாக இருந்தாலும் ‘ ஏ ’ சான்றிதழ் என்பதால் 18 வயதுக்கு கீழ் இருப்பார் திரையரங்கில் காண்பது கடினம். ஒரு சில திரையரங்கில் அனுமத்திதாலும் மல்டிபிளக்ஸில் நிச்சயம் விடமாட்டார்கள். மேலும் ‘ ஏ ’ சான்றிதழை குடும்பங்கள் பெரும்பாலான தவிர்த்துவிடும், அதனால் கலெக்ஷனில் கொஞ்சம் குறைவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ஏனென்றால் விடுதலை படத்துடன் சிம்புவின் பத்து தல மற்றும் நானியின் தசரா வெளியாகிறது. சிம்புவின்‌‍ படத்திற்கு கூட்டம் அலைமோதும், குடும்பங்களையும் அங்கு காணலாம். இருப்பினும் விமர்சனத்தில் எந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்படுகிறதோ அதுவே நல்ல லாபத்தை ஈட்டும். விடுதலை தலைப்பிற்கு கீழ் இருக்கும் வெற்றிமாறன் எனும் பெயர் அப்படத்திற்கு மிகப் பெரிய நம்பிக்கை. நிச்சயம் அனைத்து தடைகளையும் தாண்டி வெல்லும், காத்திருப்போம்.

TOP STORIES

To Top