சினிமா

அடேங்கப்பா இதை கவனித்தீர்களா.. ! விடுதலை படக் காட்சியில் வெற்றிமாறன் கொடுத்திருக்கும் கவனிக்கப்படாத குறிப்பு.. !

Viduthalai hidden detail

இயக்குனர் வெற்றிமாறனின் தொடர் ஆறாவது வெற்றித் திரைப்படமாக விடுதலை பாகம் 1 அமைந்துள்ளது. இது வரை காமெடி நடிகனாக பார்த்த சூரி இதில் ஹீரோவாக துல்லியமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். சூரி, விஜய் சேதுபதி, பவானிஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் 31ஆம் தேதி வெளியாகிய இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலகெங்கும் வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. 2018ஆம் ஆண்டு வெற்றிமாறனின் கல்ட் கிளாசிக்காக கருதப்படும் வடசென்னை படத்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். எப்போது அடுத்த பாகம் என்ற துடிப்பில் உள்ளனர்.

Advertisement

ஒரு இயக்குனரால் எப்படி இவ்வளவு நுணுக்கமாக பல விசியங்களை சேர்த்து ஓர் நான் லினியர் திரைக்கதை எழுத முடிந்தது என்ற ஆச்சர்யம் இன்றும் இருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தில் நாம் கவனிக்காத செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது போல இப்போது வெற்றிமாறனின் அடுத்த படைப்பான விடுதலையையும் கையில் எடுத்து கவனிக்கப்படாத காட்சிகளை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

இந்த தொகுப்பு படம் பார்க்காதவர்களுக்கு ஸ்பாய்லராக விளங்க வாய்ப்புள்ளது. அதனால் படம் பார்த்துவிட்டு இதைக் கண்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். விடுதலை முதல் பாகத்தில் மக்கள் படைத் தலைவரான வாத்தியாரை பிடிக்கும் நோக்கில் போலீஸார் ஓடுகின்றனர். கிளைமாக்சில் சூரி அவரைப் பிடித்து கௌதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கிறார், அதோடு முதல் பாகன் நிறைவு பெறுகிறது.

Advertisement

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் மிகவும் குறைவு தான். இதுவரை கதையில் விஜய் சேதுபதி மக்களுக்காக அரசாங்கம் மற்றும் காவல் துறையினர் செய்யும் அட்டூழியத்தை தடுக்கும் மக்கள் படைத் தகவராக வருகிறார். படத்தில் சூரியின் காதலியாக வரும் தமிழரசியின் சித்தப்பா தான் விஜய் சேதுபதி என்பது நமக்கு தெரியும், ஆனால் அது சூரிக்கு தெரியாது.

அதனால் தான் தன் காதலியைக் காப்பாற்றுவதற்காக வாத்தியாரின் இருப்பிடத்தை காட்டிக் கொடுக்கிறார். ஒரு வேளை தெரிந்து இருந்தால் அவர் அதைச் செய்யாமலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. தாய் தந்தையை இழந்த தமிழரசியை அவரது அம்மாச்சி தான் பார்த்துக்கொள்வார். தமிழரசி அவரது சித்தப்பாவைக் கண்டு 7 ஆண்டுகள் ஆகிவித்தாக கூறுவார்.

ஆனால் மறைமுகமாக விஜய் சேதுபதி அவரது அண்ணன் மகளை பார்த்து கொண்டே இருப்பததை ஓர் காட்சியில் மிக நுணுக்கமாக வெற்றிமாறன் காட்டியுள்ளார். அதை ரசிகர்கள் எப்படியோ கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றார். ‘ காட்டுமல்லி ’ பாடலில் திரையரங்கில் சூரி படம் பார்க்கும் போது தமிழரசிக்கு நொறுக்குத்தீனி வாங்கிக் கொடுத்து எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவார். அந்த ஃப்ரேமில் பின்னால் பெருமாள் வாத்தியார் அமைதியாக அமர்ந்து அதைக் கவனிப்பது ஊற்றுநோக்கிப் பார்த்தால் தெரியும்.

Advertisement

அடுத்த பாகத்தில் இதன் விளக்கங்களைக் காணலாம். இரண்டாம் பாகம் வெளியாக எப்படியும் இன்னும் 3 – 4 மாதங்கள் ஆகிவிடும், அதற்குள் இன்னும் இதுபோன்ற எத்தனை கவனிக்கப்படாத விசியங்கள் வெளியாகப் போகிறது எனப் பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top