தமிழகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் என்றால் அது விடுதலை முதல் பாகம் தான். படம் ரிலீஸ் ஆனதிலிருந்து இன்று வரை மக்கள் திரையரங்குகளில் சென்று படத்தை கொண்டாடி வருகிறார்கள். இதனால் வசூலில் கூட விடுதலை திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் விடுதலை திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் அடைந்து வெற்றி தொடர்ந்து விடுதலை படத்தின் முதல் பாகம் தெலுங்கில் நாளை ரிலீசாக உள்ளது. இதற்கான மும்முரமான பணிகளை வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது. பொதுவாக விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது விடுதலை படத்திற்கு மட்டுமல்ல அனைத்து படங்களுக்கும் இந்த விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகிறது.
விடுதலை திரைப்படம் தேர்வு காலத்தில் ரிலீஸ் ஆனதால் பெரும்பான்மையான மக்கள் திரையரங்குகளுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சில ரசிகர்கள் இருந்தனர்.ஆனால் தற்போது விடுதலை திரைப்படம் இணையதளத்தில் நல்ல குவாலிட்டியில் வெளியாகி இருக்கிறது.
இது பட குழுமினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பொதுவாக ஓட்டிட்டியில் ரிலீஸ் ஆன பிறகு தான் சட்ட விரோதமான இணையதளத்தில் நல்ல குவாலிட்டி படங்கள் வெளிவரும். ஆனால் விடுதலை திரைப்படம் ஓடிடியில் வருவதற்கு முன்பே சட்டவிரோதமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. விடுதலை முதல் பாகம் எவ்வாறு இப்படி ரிலீஸ் ஆனது என்று படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இது படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. விநியோகஸ்தர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரிண்டில் இருந்து தான் இந்த காபி ரிலீஸ் ஆகிருக்க வேண்டும் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .இதனால் விடுதலை திரைப்படம் ஒடிடியில் விரைவாக ரிலீஸ் ஆக கூடும் என தெரிகிறது.