சினிமா

ஏகே 62 படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு மறைமுக பதில்

ஏகே 62 படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியது உறுதியாகிவிட்டது. கடந்த ஆறு மாதமாக அஜித்துக்காக விக்னேஷ் சிவன் காத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் படத்திலிருந்து விக்னேஷ் சிவன், நீக்கப்பட்டார். இது ரசிகர்கள் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

எனினும் இதுகுறித்து அதிகார அறிவிப்பு வெளியாகாத நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய டிவிட்டர் பயோவில் ஏகே 62 வின் இயக்குனர் என்று போட்டிருந்தார்.இதனால் அவர் படத்தில் இருக்கிறார் என்று அனைவரும் நம்பினர் இந்த நிலையில் தனது ட்விட்டர் பயோவை திடீரென்று மாற்றிய விக்னேஷ் சிவன், தனது பக்கத்தில் கவர் பேஜில் வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கிவிட்டார்.

மேலும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அஜித்திற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் விதத்தில் ஒரு பதிவையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் .அதில் எப்போதும் தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை கண்டிப்பாக செய்யுங்கள் . எங்கே அன்பும் ஊக்கமும் இருக்கிறதோ நீங்கள் நிச்சயம் தவறாக செல்ல மாட்டீர்கள் என்று புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வைத்துள்ளார்.

Advertisement

மேலும் தன்னுடைய ஆறாவது படத்தை இயக்க இருப்பதாக பயோவில் மாற்றி இருக்கிறார் . விக்னேஷ் சிவனின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே ஏகே 62 படத்தில் மகிழ்திருமேனி தான் எடுக்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சுந்தர் சி எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மகிழ்திரு மேனி படத்தின் கதையை சொல்வதற்காக லண்டன் சென்றுள்ளதாகவும் அங்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஓகே சொன்னவுடன் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top