Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாமாமியார் ஊரில் தொழில் தொடங்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்… என்ன இப்படி இறங்கிட்டாரு என கேள்வி...

மாமியார் ஊரில் தொழில் தொடங்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்… என்ன இப்படி இறங்கிட்டாரு என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் கேரளாவில் குடியிருப்புகளை கட்டி விற்கும் தொழிலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நானும் ரவுடிதான் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் தன்னுடைய முதல் படமான போடா போடியை ரிலீஸ் செய்தார். அந்தப் பிரச்சனை அவருடைய இரண்டாவது படத்துக்கும் தொடர்ந்தது. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார்.

ஆனால் முதலில் அவருக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகுமா என்ற சந்தேகத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் பல கதாநாயகர்களிடம் கதை சொல்லியுள்ளார் விக்னேஷ்.

- Advertisement -
Vignesh Shivan and Nayanthara house

ஹீரோ கதாப்பாத்திரம் மட்டுமின்றி ஹீரோயின் கதாப்பாத்திரங்களில் நடிக்கக் கூட யாரும் முன் வரவில்லையாம். யாருக்கும் தன் கதை புரியவில்லையோ என்று சமீபத்தில் விக்னேஷ் கூறியிருந்தார். இறுதியாக விஜய் சேதுபதியே நடிக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

- Advertisement -

கல்லா கட்டாத திரைப்படங்கள்

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Nayanthara Vignesh Shivan twins

விஜய் சேதுதி, நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து எடுத்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் கல்லா கட்டவில்லை. இந்த நிலையில், கடந்தாண்டு தனது காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.

கைவிட்டுப் போன அஜித் படம்

இதனிடையே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்தை வைத்து, விக்னேஷ் சிவன் படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனகசப்பால் அந்த படத்திலிருந்து விலகினார் விக்னேஷ் சிவன். இதைத்தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு சென்றது.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுக்க போவதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

புதிய தொழிலில் இறங்கும் இயக்குனர்

இந்நிலையில் விக்னேஷ் சிவன், ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், பாடலாசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட விக்னேஷ் சிவன் அடுத்ததாக குடியிருப்புகளை கட்டி விற்கும் தொழிலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நயன்தாராவுடன் இணைந்து இந்த தொழிலில் அவர் ஈடுபட இருப்பதாகவும், இதற்காக அப்பார்ட்மெண்டுகளை அவர் கட்ட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Most Popular