நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் உச்சத்துக்கு வந்தவர் நடிகர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி பிறகு நடிகராகவும் உருவெடுத்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி பெரும் விபத்தில் சிக்கி தற்போது தான் உயிர் பிழைத்து வந்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி குடும்பத்தில் பல துக்க சம்பவங்கள் முன்பு நடந்திருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு 7 வயது இருக்கும் போதே அவருடைய தந்தை தற்கொலை செய்து கொண்டாராம். இதனால் அவருடைய தாய் தான் இரண்டு குழந்தைகளை வளர்த்து விஜய் ஆண்டனியை பெரிய ஆளாக ஆக்கியதாம்.
இதனால் தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி பல்வேறு பேட்டிகளில் பேசியிருக்கிறார். தற்கொலையை செய்யாதீர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுகளையும் விஜய் ஆண்டனி ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் ஆண்டனியின் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் மீரா தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. பல்வேறு திரைப்பட பிரபலங்களும் நடிகர் விஜய் ஆண்டனிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி மகள் மீராவுக்கு ஏற்கனவே மன அழுத்தம் ஏற்பட்டிருந்ததாகவும் அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தது.
தற்கொலைக்கு எதிராக அவரது தந்தை பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் மீரா அதனை கேட்டு தெரிந்து இருக்கக் கூடாதா என பல ரசிகர்களும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.