Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமாபாவம்ங்க இந்த நல்ல மனசனுக்கு இப்படியா நடக்கனும்.. சோகத்தில் விஜய் ஆண்டனி

பாவம்ங்க இந்த நல்ல மனசனுக்கு இப்படியா நடக்கனும்.. சோகத்தில் விஜய் ஆண்டனி

- Advertisement -

கடந்த 25 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த தாஸ் திரைப்படத்தை இயக்கிய பாபு யோகேஷ் வரன் தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து தமிழரசன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் 21 ஏப்ரல் 2023 ஆன இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சோனு சூட் ,ராதாரவி, மனோபாலா ,சுரேஷ் கோபி, பாபு ,நடிகை ரம்யா நம்பீசன் சாயா சிங் சங்கீதா கிரஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு கூடுதலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா பாடல்களை ஏற்றி இருக்கிறார். இவர்களுடைய பாடலை எதிர்பார்த்தே  பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இத்தனை காலமானாலும் இவருடைய பாடல்களுக்கு ரசிகர்கள் ஒருபோதும் குறைவது இல்லை.

- Advertisement -

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் விஜய் ஆண்டனி uடைய திரைப்படம் எதுவும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் இந்த தமிழரசன் திரைப்படம் கூட 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி விட்டது. இடையில் கொரோனா வேறு தடையாகி விட்டது பல இன்னல்களைத் தாண்டி தற்பொழுது இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகுந்த நஷ்டத்தில் இருந்திருக்கிறார். இன்னும் இவருடைய கையில் ஆறு திரைப்படங்கள் வெளியிடப்படாமல் காத்திருக்கிறதாம். 2021 ஆம் ஆண்டு கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது இந்த திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இவர் ஏற்கனவே பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து வரவேற்பினை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தார் அதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இனியாவது இவருடைய படங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட வேண்டும் என்பதற்கு ஆரம்ப புள்ளியாக இந்த தமிழரசன் திரைப்படம் அமைந்திருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Most Popular