நடப்பு கோலிவுட் சாம்ராஜ்யத்தில் அமர்திருப்பவர் தளபதி விஜய். இவரின் படங்கள் சுமாரான விமர்சனம் பெற்றாலும் வசூலில் தேவையான லாபத்தை ஈட்டி விடுகிறது. இதனால் விஜய்யின் சம்பளமும் 100 கோடியை எட்டியுள்ளது. விஜய்யை வைத்து இயக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவாக இருக்கிறது.
அதோடு விஜய்யை வைத்து படம் செய்யும் இயக்குனர் தன் கேரியரில் மேலும் வளர்க்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக கடைசி 4 ஆண்டுகளில் நான்கு இயக்குனர்கள் உள்ளார்கள். அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆவர். கத்தி, துப்பாக்கி, சர்கார் என 3 மெகா ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தன் அடுத்தப் படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.
அது தான் தர்பார். இரண்டாவதாக தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை விஜய்யை வைத்து இயக்கிய அட்லீ ஷாரூக் கனை வைத்து இயக்கும் அளவிற்கு முன்னேறினார். அவர் இயக்கியுள்ள ஜவான் தற்போது வசூலில் மூன்றே நாளில் 500 கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.
மாநகரம், கைதி என இரண்டே படங்களில் தன் திறனை அனைவருக்கும் நிரூபித்த லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். கொரோனா சமயத்தில் இப்படம் தியேட்டர்களையும் காப்பாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்குப் பின் லோகேஷ் தன் குருநாதர் கமல்ஹாசன், பகத் பாசில், சூர்யா, விஜய் சேதுபதி வைத்து விக்ரம் எனும் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படத்தை எடுத்தார்.
கடைசியாக பீஸ்ட் இயக்குனர் நெல்சனும் பெரிய உயரத்தை அடைந்துள்ளார். அண்மையில் அவர் இயக்கிய ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய சாதனை படைத்துள்ளது. பல இயக்குனர்களுக்கு விஜய் ஓர் லக்கி சார்மாகா விளங்குகிறார். இந்தப் பட்டியலில் இருக்கும் இயக்குனர் மேலும் ஓர் உயரத்தை இன்று கண்டுள்ளார்.
விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்தப் படியை எட்டியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் அனிருத் இசையில் தலைவர் ரஜினிகாந்த்துடன் கைக் கோர்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தலைவரின் 171வது படமாக இது அமைகிறது. இதுவும் ஆக்க்ஷன் படம் என்பதை இரத்தம் தெறிக்கும் போஸ்டரில் மூலம் கூறியுள்ளார்.
இயக்குனர்களின் லக்காக தளபதி விஜய் அமைந்திருக்கிறது. இது தவிர ரஜினிகாந்த்திடம் நெல்சன் கதை சொல்ல விஜய் மிகவும் உதவியதாக அவரே சொன்னார். ஸ்க்ரீனில் மட்டுமில்லாமல் ஸ்க்ரீனுக்கு வெளியிலும் ஹீரோவாக திகழ்கிறார் தளபதி விஜய்.