Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் படக்குழுக்கு பாடம் எடுத்த விஜய் தேவர்கொண்டா! என்ன மனுசன் சார்! குஷி வெற்றியை எப்படி...

ஜெய்லர் படக்குழுக்கு பாடம் எடுத்த விஜய் தேவர்கொண்டா! என்ன மனுசன் சார்! குஷி வெற்றியை எப்படி கொண்டாடி இருக்கார் பாருங்க!

ஆந்திராவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஜய் தேவர்கொண்டா தன்னுடைய குஷி திரைப்படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடுகிறார். நடிகர் விஜய் தேவர்கொண்டா கடைசியாக நடித்த லிகர் என்ற திரைப்படம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் விஜய் தேவர்கொண்டா,சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்தார். இது நல்ல வசூலை பெற்றுள்ளது.

மேலும் விஜய் தேவர் கொண்டாவுக்கு நல்ல பெயரையும் கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் விஜய் தேவர் கொண்டா மிக மகிழ்ச்சியில் இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் வெற்றியடைந்த போது படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான செக் ஆகியவற்றை வழங்கி  கௌரவித்தார்.

- Advertisement -

இதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் விஜய் தேவர்கொண்டா வித்தியாசமாக தற்போது வெற்றியை கொண்டாடு இருக்கிறார்.அதில் தன்னுடைய வெற்றியை என்னுடைய ரசிகர்களுடன் கொண்டாட விரும்புகிறேன். இதற்காக ஒரு கோடி ரூபாயை என்னுடைய ரசிகர்களின் 100 பேருக்கு பிரித்து வழங்க உள்ளேன்.

இதில் யாராவது ஒரு குடும்பமாவது இந்தப் பணத்தில் பயனடைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார். விஜய் தேவர் கொண்டாவின் இந்த செயல் சினிமா உலகில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது .விஜய் தேவர்கொண்டாவில் இந்த முயற்சிக்கு ரசிகர்களும் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

ரசிகர்களிடமிருந்து தான் பணம் திரைப்பட நடிகர்களுக்கு வருகிறது என்றும் அதனை ரசிகர்களுக்கே திரும்பி வழங்குவது தான் சரியான விஷயம் என்றும் பலரும் பாராட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே கோடீஸ்வரனாக இருக்கும் நடிகர்களுக்கு கார் ,செக் வழங்கி என்ன பயன் என்றும் அதனை ரசிகர்களுக்கு கொடுத்தாவது யாரேனும் பயன்பெறுவார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Most Popular