சினிமா

ஒரு பெயரை பார்த்து ஏமாந்த விஜய் ரசிகர்கள்.. வாரிசு ஆல்பத்தில் டிவிஸ்ட்

விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்த வாரிசு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவின்போது ரசிகர்கள் கதவை திறந்தவுடன் ஓடி வந்ததில் போலீஸ்காரர்கள் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்த நிலையில் விஜய் படத்தில் அண்மைக்காலமாக சில எவர்கிரீன் பாடல்கள் இடம் பெற்று வருகிறது.

Advertisement

குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜயின் கில்லி படத்தின் கபடி கபடி தீம் மியூசிக் மாஸ்டரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த வகையில் வாரிசு படத்திலும் அது போன்ற ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். காரணம் சங்கர் மகாதேவன் வாரிசு படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடி இருக்கிறார்.இதனால் யூத் படத்தில் இடம்பெற்ற  ஆல்தோட்ட பூபதி பாடல் வாரிசு திரைப்படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை நம்பி விஜய் ரசிகர்கள் அந்த பாடலை மிகவும் எதிர்பார்த்தனர்.

இதனை ரகசியமாக பட குழு வைத்திருக்கின்றனர் என்று விஜய் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நேற்று இசை வெளியீட்டு விழாவில் சங்கர் மகாதேவன் வா தலைவா என்ற பாடலை தான் பாடினார். இதனால் ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்படவில்லை என கடைசியில் தான் தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கிறார்கள். இதேபோன்று படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், 5 பாடல் மட்டும் தான் தற்போது வெளியாக இருக்கிறது.

Advertisement

அதில் இரண்டு பாடல் தீம் மியூசிக் வகையில் இருக்கிறது. இதனால் கூடுதலாக ஒரு பாப்பா பாப்பா என்ற பாடல் மட்டும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை .முதலில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் விஜயின் தொடக்கப் பாடலில் மாஸ் வகையில் இல்லாமல் கிளாஸ் வகையில் இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top