சினிமா

ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான கோரிக்கை.. தோள் கொடுக்கும் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களாக விளங்குபவர்கள் விஜயும், அஜித்தும் தான். தற்போது இவர்களுக்கு தான் அதிக ரசிகர்கள் இளைஞர்கள் மத்தியில் இருக்கிறார்கள். விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் அதனை கிண்டல் செய்வதும், அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் அதனை கிண்டல் செய்வதும் என்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

Advertisement

சில சமயம் இந்த மோதல் முகம் சுளிக்கும் அளவுக்கு ட்விட்டரில் போராக வெடிக்கும். ஆனால் இன்று அஜித்துக்காகவும், அஜித் ரசிகர்களுக்காகவும் விஜய் ரசிகர்கள் தோள் கொடுத்து நிற்கும் காட்சி பார்ப்பதற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் தனது 85 ஆவது வயதில் காலமானார். இதற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தின் இந்த இழப்புக்கு பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இரங்கல் தெரிவிப்பது மட்டுமல்லாமல் ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அஜித் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றும் நம்பிக்கை கூறியிருக்கிறார்கள்.

Advertisement

இதேபோன்று அஜித் ரசிகர்களுக்கும் அஜித்துக்கும் நாங்கள் இந்த இக்கட்டான நிலையில் துணை நிற்கும் என்றும் கூறியுள்ளனர்.இதற்கு அஜித் ரசிகர்களும் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இதனை பார்க்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சூர்யா, விக்ரம், ரஜினி ஆகியோரோடு ரசிகர்களும் அஜித்துக்கு தங்களது ஆறுதலை கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது தந்தை நான்காண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவருடைய இறுதி சடங்கு குடும்ப நிகழ்வாக நடக்க இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய பிரைவசியை மதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top