Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாபெண் தோழி குறித்து பேசிய விஜய்.. ஆடியோ லாஞ்ச் பேச்சு முழு விவரம்

பெண் தோழி குறித்து பேசிய விஜய்.. ஆடியோ லாஞ்ச் பேச்சு முழு விவரம்

- Advertisement -

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ரசிகர்களிடம் உரையாடினார். இது குறித்து பேசிய அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று தன்னுடைய பேச்சை தொடங்கினார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நம்முடைய நன்றியை காட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட விஜய் ,ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் திரைப்படங்களில் உழைத்து வருவதாக கூறினார்.

நாம் செல்லும் பாதை நிறைவாக இருக்க வேண்டும் என்றால் , நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியாக இருக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டார். வழக்கம்போல் தன்னுடைய பேச்சில் ஒரு குட்டி கதையை விஜய் கூறினார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் யார் என்ற சர்ச்சை அண்மையில் நடந்ததற்கு பதில் அளிக்கும் விதத்தில், விஜயின் குட்டி ஸ்டோரி அமைந்தது. அதில் தாம் 1992 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருவதாகவும் ,அப்போதிலிருந்து ஒரு நடிகருடன் தமக்கு போட்டி ஏற்பட்டதாகவும் கூறினார். அந்த நடிகன் உழைத்தால் தாமும் உழைப்பேன் என்றும் ,அவர் புது விஷயங்களை கற்றால் நானும் கற்பேன் என்றும் அவர் ஓடினால் நானும் ஓடுவேன் என்றும் கூறினார்.

- Advertisement -

அந்த நடிகர் வேறு யாருமில்லை அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறினார். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நீங்களே போட்டியாக இருங்கள் என்று குறிப்பிட்ட விஜய், அப்போதுதான் பெரிய சாதனைகளை படைக்க முடியும் என்று கூறினார். தேவையான விமர்சனம் தேவையில்லாத எதிர்ப்பு ஆகியவை தான் நம்மை ஓட வைக்கும் என்று குறிப்பிட்ட நடிகர் விஜய் வாரிசு திரைப்படம் மனதிற்கு திருப்தியை அளிப்பதாகவும் குறிப்பிட்டார் .

- Advertisement -

நடிகை குஷ்புவின் சின்னத்தம்பி திரைப்படத்தை பார்ப்பதற்காக தனது பெண் தோழியுடன் கமலா தியேட்டரில் சென்று படத்தை பார்த்ததை நடிகர் விஜய் நினைவு கூர்ந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு விஜய் அதனை தனது பிஆர்ஓ விடும் கொடுத்து நெஞ்சில் குடியிருக்கும் என ஹாஸ்டாக் போட்டு பதிவிடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

Most Popular