Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமாகில்லி - தீனா என விண்டேஜ் படங்களுடன் மீண்டும் மோதும் விஜய் - அஜித் !...

கில்லி – தீனா என விண்டேஜ் படங்களுடன் மீண்டும் மோதும் விஜய் – அஜித் ! ரீ-ரிலீஸ் அறிவிப்பு.. எப்போது தெரியுமா ?

தளபதி விஜய் – தல அஜித் புதிய படங்கள் இனி மோத வாய்ப்பே இல்லை. விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மறுபக்கம் அஜித்குமார் பைக் டூரில் கவனம் செலுத்துவதால் சினிமாவில் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிட்டு வருகிறார்.

- Advertisement -

ஜில்லா – வீரம் மோதலுக்கு பின்னர் கடந்த ஆண்டு வாரிசு – துணிவு படங்கள் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மோதியது. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கொண்டாட்டமும் காணப்பட்டது. இரு படங்களும் நல்ல லாபத்தைப் பெற்றன. வசூலில் வாரிசு படமும் விமர்சனத்தில் துணிவு படமும் வென்றது.

அடுத்ததாக விஜய் செய்யவிருக்கும் இரு படங்களும் அஜித் படத்துடன் மோதுமா என்பது பெரிய கேள்விக்குறி. வாய்ப்பு இல்லை எனக் கூட சொல்லலாம். ஆனால் புதிய வித மோதலாக பழைய படங்கள் ரீ ரிலீஸில் இருவரும் மோதவுள்ளனர். வருகின்ற கோடைக்கு நாம் அதனை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கடந்த ஓர் ஆண்டாக விண்டேஜ் படங்கள் மீண்டும் ரீலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ்புல் ஷோக்களுடன் தியேட்டர்கள் ஒட்டின. இதனை டிரெண்ட் செய்தது சென்னை கமலா சினிமாஸ். அவர்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு படங்கள் அனுமதியுடன் மீண்டும் ரீலீஸ் ஆகியது.

- Advertisement -

இன்னும் ரசிகர்கள் அதிகம் விரும்பும் படங்கள் ஒப்பந்தம் இல்லாததால் ரீ ரீலீஸ் ஆகாமல் உள்ளது. அவை கில்லி, தீனா, வேல் போன்றவை. இதில் விஜய்யின் கில்லி மற்றும் அஜித்தின் தீனா இரு படங்களும் விஜய் & அஜித் கேரியரில் அதிகம் கொண்டாடப்பட்ட படம். இது எப்போது மீண்டும் வெளியாகும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் தவித்துக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அஜித்தின் தீனா – 2004ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான விஜய்யின் கில்லி இரு படங்களும் ஏப்ரல் மாதம் மோதவுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ செய்தி எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular