Sunday, July 6, 2025
- Advertisement -
Homeசினிமாதலைகீழாக குதிக்கப் போகும் விஜய்.. கட்சி வேலை தொடக்கம்..!

தலைகீழாக குதிக்கப் போகும் விஜய்.. கட்சி வேலை தொடக்கம்..!

கடந்த சில நாட்களாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அரசியல் நோக்கத்தில் தான் என்று பலரும் கருத்து கூறி  வந்தார்கள்.

- Advertisement -

சமீபத்தில் அவர் தூத்துக்குடி மக்களுக்கு உதவியது கூட அரசியல் நோக்கத்தோடு தான் என்று மக்கள் கூறியது தற்போது உண்மையாக இருக்கிறது. விஜய் ரசிகர்களின் உடைய விஜய் மக்கள் இயக்கம் தற்பொழுது அரசியல் கட்சியாக போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயின் பெயரில் ரசிகர்கள் துவங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை  விஜய் தன்னுடைய அரசியல் கட்சியாக மாத்தப் போவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்த இயக்கத்தின் நிர்வாகி ஆன  புஸ்ஸி ஆனந்த் மேலும் பல நிர்வாகிகள் அதை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக டெல்லி சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் நேற்றைய தினம் பனையூரில் நடந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் ஆலோசனை செய்தார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இது போன்ற தகவல்களால் நடிகர் விஜய் விரைவில் அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்ற தகவல் உறுதி ஆகி வருகிறது. நேரடியாக தளபதி விஜய் எப்பொழுது இதை அறிவிக்க போகிறார் என்று ரசிகர்கள் பெரும் அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள் அந்த நாளும் விரைவில் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.

சினிமாவில் வெற்றி வாகை சூடிய தளபதி விஜய் அரசியலிலும் ஒரு கை பார்க்கலாம் என்று களம் இறங்கப் போகிறார் என்று ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Most Popular