Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா9 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் குட்ஸ் பிலீம்ஸ் உடன் இணையும் விஜய்.. இயக்குனர் யார்?

9 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் குட்ஸ் பிலீம்ஸ் உடன் இணையும் விஜய்.. இயக்குனர் யார்?

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனி பெயர் இருக்கிறது. அந்த நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் அது குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் திரைப்படமாக இருக்கும் என்ற நன்மதிப்பு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பெரிய ஹீரோக்கள் வைத்து மட்டுமல்லாமல் லாரன்ஸ் உள்ளிட்ட சிறிய நடிகர்களையும் 2000 ஆண்டுகளிலேயே தூக்கிவிட்ட தயாரிப்பு நிறுவனம் என்றால் அது சூப்பர் ஃபிலிம்ஸ் தான். தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனம் ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டை நடிகர் விஜயை வைத்து திரைப்படம் எடுக்க உள்ளது.

- Advertisement -

விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி போன்ற படங்களை கூட சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறார்கள்.
.
இந்த நிலை விஜயும் சூப்பர் குட் பிரெண்ட்ஸ் நிறுவனம் கடைசியாக ஜில்லா படத்தில் 2014 ஆம் ஆண்டு இணைந்தனர். அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் கூட்டணி சேர உள்ளனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்பி சவுத்ரியின் மகனும் நடிகரும்மான ஜித்தன் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில் ,தாங்கள் நடிகர் விஜயை வைத்து படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாகவும் இதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

விஜய்க்கும் தங்களுக்கும் பிடித்த மாதிரி கதை கிடைத்தால் உடனே அந்த படத்தை தயாரிக்க பணியில் சூப்பர் குட்ஸ் நிறுவனம் ஈடுபடும் என ஜித்தன் ரமேஷ் கூறியுள்ளார். அனைத்தும் சரியாக நடந்தால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய படத்தை விஜயை வைத்து தயாரிக்கும் என்றும் ஜித்தன்  ரமேஷ் கூறியுள்ளார்.

இதனால் பல வெற்றி படங்களை கொடுத்த ஆர்பி செளதிரியும் நடிகர் விஜய்யும் மீண்டும் இணைய உள்ளது கோலிவுட்டை கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்ற அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும்.

Most Popular