Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாசஞ்சய் தத் பார்த்து வியந்து போன விஜய்..! லியோ சூட்டிங்கில் சுவாரஸ்யம்

சஞ்சய் தத் பார்த்து வியந்து போன விஜய்..! லியோ சூட்டிங்கில் சுவாரஸ்யம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களாக இந்தத் திரைப்பட காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்ட வந்தது. தற்பொழுது சென்னையில் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் பல முக்கிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. தளபதி விஜய், நடிகை திரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் ,மிஸ்கின் போன்ற பல முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இவ்வளவு நடிகர்களையும் வைத்து லோகேஷ் கனகராஜ் எப்படி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் பெரும் அளவில் ஏற்பட்டிருக்கிறது. மேலும் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் ஒரு சண்டைக் காட்சியில் அர்ஜுன் மற்றும் விஜய் இருவருமே இளமையான தோற்றத்தில் இருந்தார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஏறத்தாழ 2000 டான்ஸர்களை வைத்து பாடலை எடுக்க இருக்கிறதாக கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக பாலிவுட் பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் பிற மொழி நடிகர்களோடு இணைந்து நடிக்கும் பொழுது பெருமளவில் ஈடுபாடு காட்ட மாட்டார்கள் .நடித்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். ஆனால் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருக்கும் சஞ்சய் தத் இத்திரைப்படத்தின் நடித்து வருகிறார்.

ஆனால் அவர் தனக்கென்று எந்த இடைவெளியும் பிறரிடம் ஏற்படுத்திக் கொள்ளாமல் அனைவரிடமும் நெருங்கி பழகுகிறார். அவரிடம் சற்றும் தன்னைப் பற்றிய தலைகனம் இல்லை என்பது போல் தளபதி விஜய் சஞ்சய் தத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதாக கூறியிருக்கிறார்.

தளபதி விஜய் இதே குணாதிசயம் உள்ளவர்தான் என்பது அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.இதன் காரணமாகவே அவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்பொழுது அவரே சஞ்சய் தத்தை பார்த்து இப்படி கூறி இருப்பது வியப்பாக இருக்கிறது.

இது போன்றவர்களால் எவ்வளவு உயரம் சென்றாலும் மனிதர்களை மதிக்காமல் இருக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

இந்தத் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு சஞ்சய்த்த தந்தையாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. அதேபோல் நடிகர் அர்ஜுன் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாம் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலாக வெளிவரவில்லை.

Most Popular