சினிமா

சன் பிக்சர்ஸ் உடன் மீண்டும் இணையும் தளபதி விஜய்.. இயக்குனர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தன்னுடைய 66-வது திரைப்படமான வாரிசில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜயின் கால்ஷிட்டுகளை பெறுவதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் காத்துள்ளனர். அதற்குக் காரணம் நடிகர் விஜய் படத்தின் கதை சரியாக இல்லை என்றாலும் கூட, போட்ட காசை படம் எடுத்து விடுகிறது என்ற நம்பிக்கைதான் .சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை பெற்றது.ஆனால் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்தது.

Advertisement

இதனால் விஜயை அடுத்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என்று கோடம்பாக்கம் தயாரிப்பு நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.இந்த படத்தை செவன் ஸ்கிரீன் திரைப்படம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக இருந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜயை வைத்து திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் திரைப்படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்து மார்க்கெட்டிங் யுக்திகளால் சுமாரான படத்தை கூட ஹிட்டாச்சி விடும் .ஆனால் சமீப காலமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள் போதிய விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

Advertisement

எப்போதும் விஜய் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்திற்கு அப்படி எந்த ஒரு விழாவையும் நடத்தவில்லை. மேலும் படத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் விளம்பரங்களை தொடங்கியதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கதை களத்திற்கு தேவையான செலவுகளை வேண்டுமென்றே குறைப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வணிக வளாகத்தில் கதை நடைபெறும் பீஸ்ட் படத்தில் வெறும் 60, 70 துணை நடிகர்களை மட்டுமே அந்த நிறுவனம் பயன்படுத்தியது.

இதுபோன்று தயாரிப்பு செலவுகளை கஞ்சத்தனம் செய்து படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மொக்கை செய்து விடுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். பீஸ்ட் திரைப்படம் போதே சன் பிக்சர்ஸ் உடன் விஜய் இனி இணைய கூடாது என அந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் படம் செய்வது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் எடுக்கும் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top