தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார்.
அதே சமயம் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அதற்குரிய வேலைகளும் ஆர்வம் காட்டி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு டெல்லிக்கு சென்று இருந்தார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது.
முழுமூச்சாக விஜய் அரசியலில் இறங்கப் போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது இன்னும் மூன்று வருடத்திற்கு விஜய் நடிக்க இருக்கும் திரைப்படங்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் இவற்றை தொடர்ந்து தளபதி 70 திரைப்படத்தை இயக்குனர் சங்கரும், தளபதி 71 திரைப்படத்தை இயக்குனர் அட்லியும் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
வருகின்ற மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து தளபதி விஜய் நடிக்க இருக்கும் .இந்த மூன்று திரைப்படங்களுமே பிக் பட்ஜெட் திரைப்படங்கள் ஆகும்.
மேலும் தளபதி விஜய்க்கு இன்னும் அற்புதமான ப்ராஜெக்ட்கள் வர இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நடிகர் விஜய் சினிமாவை கைவிட்டு முழுமூச்சாக அரசியல் இறங்குவது சாத்தியம் இல்லாத ஒன்று என்பது தெளிவாகிறது.
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தளபதி விஜய் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது வந்திருக்கும் இந்த திரைப்படங்களின் பட்டியல்களை பார்க்கும் பொழுது இந்த வருடம் தளபதி விஜய் அரசியலில் இறங்குவது சற்று சந்தேகமாக உள்ளது.